மாணாக்கன் றொழுதுரைத்த வாறுகாண்க. |
| மெய்ப்பொரு ளொருபொருண் மேவி யேத்தவுஞ் செப்பரு மறைப்பொரு டிசையெலாம் வழங்கவும் வேதப் பயன்றரும் வெளிறில வாயா லோதித் தொன்னூ லுடைப்பயன் பொதுப்படச் செந்தமி ழுணர்ந்து தெளிந்த முன்னோர் தந்த நடையொடு சிலபுற நடையியைந் தெண்ணைந் தெழுத்துஞ் சொன்னூற் றிரண்டு மெண்ணே ழிரண்டு பொருள்யாப் பொருநூறு மெண்ணெட் டாறணி யெனச்சூத் திரத்தொகை யெண்ணாற் பத்தைந்து மீரைந்து மாக வருந்தமி ழிலக்கண மைந்தையும் விரித்து விளக்கினன் வீரமா முனியே. | |
வெண்பா. |
| ஆதி நூலோதிய வோராதிப் பொருடேரா னோதி நூலாய்ந்து முணர்வானோ - கோதினூற் கற்றாலுங் கற்றபய னுண்டோ வக்கடவு ளெற்றாலு மேத்தாக் கடை. | |
............................. |
இந்நூற்குக் கலைவல்லவர் தெருட்குரு வென்னுஞ் சிறந்தநாமஞ் சூட்டினர். அஃதென்னையோவெனின்:- |
கட்டளைக்கலித்துறை. |
| அருட்கலைஞோர் முத்தமிழ் நூலுரைத்த வறமுதனாற் பொருட்களை யாய்ந்துழி வல்லோர்தெரித்த புதைபொருளின் மருட்களை நூக்கிப் பொருட்பயன் சூட்டி வழுத்துதலாற் றெருட்குரு நாமந் தொன்னூல் விளக்கிற்குச் சிறந்ததுவே. | |
.............................. |
முன்னூற்றுளக்கிய வைந்திலங்கணத் தொன்னூல் விளக்கம் |
முற்றிற்று. |