27 | மூன்றாவதெழுத்தின்விகாரம் | எ-ம். இனிச்சொல்லும்படி வழங்கும். அவற்றுள், இலக்கணப்போலி வருமாறு. (உ-ம்.) இல் முன் - முன்றில், வேட்கைநீர்-வேநீர், நகர்ப்புறம் - புறநகர், வேட்கையவர், வேணவாய், கண்மீ - மீகண், கோவில் - கோயில், பொதுவில் - பொதியில், பின் - பின்றை, எ-ம். வரும். அன்றியும், மரூஉமொழி வருமாறு. (உ-ம்.) அருமருந்தன்ன பிள்ளை - அருமந்தபிள்ளை, கிழங்கன்னபழஞ்சோறு - கிழங்கம் பழஞ்சோறு, சோழநாடு - சோணாடு, எவன்-என்-என்ன, பெயர்-பேர், யாடு-ஆடு, சாத்தன்றந்தை - சாத்தந்தை, சென்னைபுரி - சென்னை, புதுவைபுரி - புதுவை, மலையமாநாடு - மலாடு, பாண்டியநாடு - பாண்டிநாடு, தஞ்சாவூர் - தஞ்சை, பனையூர் - பனசை, சேந்தமங்கலம் - சேந்தை, ஆற்றூர் - ஆறை, ஆதன்றந்தை - ஆந்தை, பூதன்றந்தை - பூந்தை, வடுகன்றந்தை - வடுகந்தை, என்றந்தை - எந்தை, உன்றந்தை - உந்தை, முன்றந்தை - முந்தை, யார் - ஆர், யானை - ஆனை, யாறு - ஆறு, மரவடி - மராடி, குளவாம்பல் - குளாம்பல், எ-ம். அ, இ, என்னுஞ் சுட்டுக்கள் அந்த, இந்த, எ-ம். வரும். இத்தொடக்கத் தேற்குஞ் செய்கையறிந்து முடிக்கவும். போலிமொழியும் மரூஉமொழியும் ஒரு மொழியினுந் தொடர்மொழியினும் விகாரப்பட்டு வருவன. (194-ஞ். சூத்திரத்திற் காண்க.) எ-று. (19) | | 40. | உயிரேகுறினெடி லொற்றுமூவின முயிர்மெய்யாய்த மோரறுகுறுக்க மளபெடைமாத்திரைப் புணர்பெனவகுத்து ணநமனலளதவு நண்ணுந் திரிபல தேனைதிரியா தியல்பாமென்ன விவண்விளக்கிய வெழுத்தினியல்பே. | | | (இ-ள்.) இவ்வெழுத்ததிகாரத்துள் விளங்கியவற்றை இங்ஙனம் தொகையாகத் தந்தவாறுகாண்க. அன்றியும், (இந்நூற்புணர்ச்சிமுடிவில், நன்னூற்புணர்ச்சி சிலகூறுதும்.) இயல்பு புணர்ச்சி வருமாறு. (சூத்திரம்.) 'பொதுப்பெயருயர்திணைப் பெயர்களீற்றுமெய், வலிவரினியல்பாமாவிய ரமுன், வன்மை மிகாசிலவிகாரமாமுயர்திணை.' (உ-ம்.) சாத்தன்பெரியன், சாத்தன்பெரிது, அவன்பெரியன், அவள்பெரியள், சாத்திபெரியள், சாத்திபெரிது, தாய்பெரியள், அவர்பெரியர், குமரக்கோட்டம். (சூ) 'ஈற்றியாவி னாவிளிப்பெயர் முன்வலியியல்பே.' (உ-ம்.) நம்பியாகொண்டான், நம்பியோ சென்றான், நம்பியேதந்தான், யாகுறிது விடலாதா, (சூ.) 'செய்யியவென்னும்வினையெச்சம்பல்வகைப், பெயரினெச்ச முற்றாறனுருபே, யஃறி ணைப்பன்மை யம்ம முன்னியல்வே.' (உ-ம்.) உண்ணியகொண்டான், உண்டசாத்தன், உண்டுபோனான், வாழ்ககொற்றா, தன்கைகள், பலகுதிரைகள், அம்மகொற்றா, (சூ.) 'பவ்வி நீமீமுன்னரல்வழி, யியல்பாம்வலிமெலி மிகலு |
|
|