தன்மைப்பன்மை எதிர்காலம் என்கிற ஒரு பொருள்குறித்த பலவிடைத் திரிசொல். கொல், இது ஐயம், அசைநிலை, என்கிற பலபொருள் குறித்த ஓரிடைத்திரிசொல். சால, உறு, தவ, நனி, கூர், கழி, இவை மிகல் என்கிற ஒருபொருள்குறித்த பலவுரித்திரிசொல். கடி என்கிறது காப்பு, கூர்மை, அச்சம், கரிப்பு, விளக்கம், சிறப்பு, மணம் முதலிய பலபொருள்குறித்த ஓருரித்திரிசொல். மற்றவையு மிப்படியே வருதல்காண்க. இயற்சொல், ரூடியார்த்தம், எ-ம். திரிசொல், யோகார்த்தம், எ-ம். வடமொழியில் வழங்கும், எ-று. (4) | 45. | ஒருமொழியொன்றையும் பலவையுந்தொடர்மொழி பொதுவவ்விரண்டையும் புகலுந்தன்மைய தொகைதொகாவென விருதொடர்மொழியென்ப. | | (இ-ள்.) மும்மொழிகளாமா றுணர்த்துதும். முதலாவது, ஒருமொழிகள் பகுப்பில்லாது ஒருபொருளை உணர்த்துவன ஒருமொழிக ளெனப்படும். (உ-ம்.) நம்பி, நங்கை, நிலம், நீர், வந்தான், வந்தாள், எ-ம். பிறவுமன்ன. இரண்டாவது, தொடர்மொழிகள் பலமொழி தொடர்ந்து நின்றுபொருளை உணர்த்துவன தொடர்மொழிகளெனப்படும். இவையே தொகைநிலைத் தொடர்மொழிகள், எ-ம். தொகாநிலைத் தொடர்மொழிகள், எ-ம். இருவகைப்படும். தொகையாய்த்தொடர்ந்து வருமொழிகள் ஆறெனப்படும். தொகாமையாய்த் தொடர்ந்துவருமொழிகள் ஒன்பதெனப்படும். (உ-ம்.) அறஞ்செய்தான் - உருபுத்தொகை, கொல்புலி - வினைத்தொகை, கருங்குவளை - குணத்தொகை, வேல்விழி - உவமைத்தொகை, இராப்பகல் - உம்மைத்தொகை, தாழ்குழல் - அன்மொழித்தொகை, எ-ம். வரும் தொகைநிலைத் தொடர்மொழிகள். வந்தான் சாத்தன் - தெரிநிலைவினைமுற்று, வில்லினனிவன் - வினைக்குறிப்புமுற்று, வந்தவரசன் - பெயரெச்சம், வந்து சென்றான் - வினையெச்சம், ஐயன்வந்தான் - வினைமுதல், ஐயாகேள் - விளி, கல்வியைவிரும்பினான் - இரண்டனுருபு, தவத்தால்வீடெய்தான் - மூன் றனுருபு, இரப்போர்க் கீய்ந்தான் - நான்கனுருபு, குணத்திற்சிறந்தோன் - ஐந்தனுருபு - கடவுளதுகிருபை - ஆறனுருபு, விளக்கின்கண்ணொளி - ஏழனுருபு, இதுவோகண்டபயன் - இடைச்சொல், நனிபேதை - உரிச்சொல், வருகவருக - அடுக்கு, எ-ம். வரும் தொகாநிலைத் தொடர்மொழிகள் - நன்னூல்.-"முற்றீரெச்ச மெழுவாய் விளிப்பொரு, ளாறுருபிடையுரியடுக் கிவைதொகாநிலை." எ-து. மேற்கோள். இவையெல்லாம் ஒருவசனத்துளடங்கும். (உ-ம்). வெய்யகண்ணனே கடிபோய் மலையிலிழிந்த யானையது கோட்டைநுனிக்கட்பொருட்கு வாளாற்கொய்தான், எ-ம். வரும். மூன்றாவது, பொதுமொழிகள் ஒரு மொழியாய்நின்று ஒருபொருளை உணர்த்தியும் அதுவே தொடர்மொழியாய் நின்று பலபொருளை உணர்த்தியும் இரண்டற்கும் |
|
|