பொதுவாய் நிற்பன பொதுமொழிகளெனப்படும். (உ-ம்.) எழுந்திரு ந்தான்; இதுவே ஒருமொழியாக எழுந்தானென்று கொள்ளவும், தொடர் மொழியாக எழுந்து பின்னிருந்தானென்று கொள்ளவுமாம். வேங்கை; இதுவே ஒருமொழியாகப் புலியு மரமுமென்றுகொள்ளவும், தொடர்மொழி யாகவேகுங்கை யென்று கொள்ளவுமாம். தாமரை; இதுவே ஒருமொழியாக ஒரு பூவென்று கொள்ளவும், தொடர்மொழியாகத் தாவுகின்றமரை யென்ற கொள்ளவுமாம். தொகைநிலை - சமாசமென்பர். எ-று. (5) | 46. | பகாப்பதமென்ப பயனாற்குறியாற் பகாதொன்றாகிப் பகுப்பிற்பயனிலா நிகழ்ந்தியல்கின்ற நால்வகைச்சொல்லே. | | (இ-ள்.) பகாப்பதங்களாமாறுணர்த்துதும். பெயர், வினை, இடை, உரி என நால்வகைச்சொல் தாமேவிளக்கும் பொருட்பயனாலாயினுஞ் சொல்பவன் குறித்தபயனாலாயினும் பகாதொன்றாகிப் பகுப்பினும் பயனிலாவாகி ஒருபொருளைத் தருவனவெல்லாம் பகாப்பதங்களெனப்படும் (உ-ம்.) நம்பி, நங்கை, மலை, கடல், காடு, நிலம், நீர், தீ, காற்று, வான் என்பன பெயர்ப் பகாப்பதங்கள். நட, வா, போ, மடி, கிட, உண், தின், என்பன வினைப் பகாப்பதங்கள். மன், கொல், மற்று, போல, அம்ம என்பன இடைப் பகாப்பதங்கள். உறு, தவ, கடி, நனி, எழில், சால், கழி என்பன உரிப்பகாப்பதங்கள். இவையெல்லாந் தாமே விளக்கும் பொருட்பயனால் ஒன்றாகிவந்த பகாப்பதங்கள். கூத்தன், கறுப்பன், சிலம்பி முதலியவோவெனில் கூத்தையாடினான், எ-ம். கரிய நிறத்தையுடையான், எ-ம். மலையிற்பிறந்தாள், எ-ம். பகுக்கப்பட்டுப் பலபொருளைத் தருவன வாகையிற் பகாப்பதங்களல்லன. மக்களும், விலங்கினுள், இன்னான், இன்னது, என இடுகுறிப்பெயராகக் குறிக்கப்பட்டு ஒன்றாய் நின்று ஒரு பொருளைத் தருதலால் பகாப்பதமாயின. இடுகுறிப்பெயர், பகாப்பதங்கட் குரித்து. காரணப்பெயர், பகுபதங்கட்குரித்து. வடநூலார் பகாப்பதத்தை ரூடம் என்பர், எ-று. (6) | 47. | பகுபதமொன்றாய்ப் பலவொருங்குணர்த்திப் பொழுதுகொள்வினையும் பொருளிடங்காலஞ் சினைகுணந்தொழிலாறுஞ் சேர்ந்தபெயருமாம். | | (இ-ள்.) பகுபதங்களா மாறுணர்த்துதும். ஒருமொழியாகநின்று ஒருப்படப்பலபொருளை உணர்த்துவன பகுபதங்களெனப்படும். மேற்காட்டிய மலை, ஒடை முதலிய திரிசொல் ஒன்றாகிப் பலபொருளை உணர்த்தினும் பகுபதங்களல்லன. தெரிநிலையாகவுங் குறிப்பதாகவுங் காலத்தைக்கொண்டு வரும் வினை, வினைப்பகுபதம். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என அறுவகைக்காரணங்களை யடுத்துவரும் பெயர், பெயர்ப்பகுபதம். |
|
|