| டோரெழுத்தியல் பதமாறேழ்சிறப்பின பகாப்பதமேழும் பகுபதமொன்பது மெழுத்தீறாகத் தொடருமென்ப." | | (இ-ள்.) ஓரெழுத்தொருமொழியு மிருபதவெழுத்தளவு மாமாறுணர்த்துதும், பகாப்பத மொவ்வோரெழுத்துப் பதங்களாகவு நிற்கும். அவை எத்துணையோவெனில், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ எனத் தனியுயிர்ப் பதமாறும்; மா, மீ, மூ, மே, மை, மோ எனத்தனிமகரப் பதமாறும்; தா, தீ, தூ, தே, தை எனத்தனித்தகரப் பதமைந்தும்; பா, பூ, பே, பை, போ எனத் தனிப் பகரத் பதமைந்தும்; நா, நீ, நே, நை, நோ எனத்தனிநகரப் பதமைந்தும்; கா, கூ, கை, கோ எனத்தனிக் ககரப் பதநாலும்; சா, சீ, சே, சோ எனத் தனிச்சகரப் பதநாலும்; வா, வீ, வே, வை எனத்தனி வகரப்பதநாலும்; யா, எனத்தனி யகரப்பதம் ஒன்றும்; ஆக நெட்டெழுத்துத் தனித்து நின்றுவரும் பதம்நாற்பதும்; நொ, து, எனக்குற்றெழுத்துத் தனித்து நின்றுவரும்பதம் இரண்டுங் கூடிய நாற்பத்திரண்டுஞ் சிறப்பின. இவையன்றிப் பகரவீகாரமுதலிய சிறப்பில்லனவுஞ்சிலவுள. அன்றியும், பலவெழுத்துத் தொடர்ந்துவரும் பதத்துட் பகாப்பதம் இரண்டெழுத்துமுதல் ஏழெழுத்தீறாகவும் பகுபதம் இரண்டெழுத்துமுதல் ஒன்பதெழுத்தீறாகவுந் தொடர்ந்துவருமெனக்கொள்க. ஈண்டுயிருமுயிர்மெய்யுமன்றி ஒற்றுமெண்ணுக. (உ-ம்.) அணி, அறம், அகலம், அருப்பம், அருப்பலம், உத்திரட்டாதி என்பன பகாப்பதங்கள்; கூனி, கூனன், குழையன், பொருப்பன், ஆரணத்தான், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான், என்பன பகுபதங்கள். அருப்பலம், எ-து. அனிச்சமரம். அருப்பம்=ஊர், ஆ=பசு, ஈ=வண்டு, ஊ=ஊன், ஏ=அம்பு, ஐ=அரசன், ஓ=மடை யடைக்குங்கதவு, மா=அழகு, மீ=மேல், மூ=மூப்பு, மே=ஏவல், மை=கறுப்பு, மோ=மோவன்னேவல், தா=பகை, தீ=நரகம், தூ=சுத்தம், தே=கடவுள், தை=பூசநாள், பா=வெண்பா, பூ=பூமி, பே=நுரை, பை=நிறம், போ=ஏவல், நா=நாக்கு, நீ=முன்னிலை, நே=அன்பு, நை=ஏவல், நோ=நோய், கா=சோலை, கூ=பூமி, கை=சிறுமை, கோ=கண், சா=ஏவல், சீ=இலக்குமி, சே=எருது, சோ=மதில், வா=விளித்தல், வீ=சாவு, வே=ஏவல், வை=வைக்கோல், யா=அஃறிணைப் பன்மைவினா, நொ=ஏவல், து=உண், கு, கௌ, வௌ, பீ எனச் சிறப்பில்லனவுங் கொள்க, எ-று. (8) | 49. | ஆகுபெயரென்ப தவ்வவமுதற்சினை கருவிகாரியம் பண்பிவற் றொன்றன்பெயர் பிறிதொன்றற்குரைக்கும் பெற்றிதானே. | | (இ-ள்.) ஆகுபெயரா மாறுணர்த்தும். ஆகு பெயர் ஐவகைப்படும். முதற்குச்சினையும், சினைக்குமுதலும், காரணத்திற்குக் காரியமும், |
|
|