(இ-ள்.) சாரியையாமாறுணர்த்துதும். தொடர்மொழியாகப் பதத் தோடுபதமும் பகுபதமாகப் பகுதியோடு விகுதியும் பெயர்ப்பொருளாகப் பெயரோடுருபும் புணருங்காலே நிலைப்பதத்திற்கும் வரும்பதம் விகுதியுருபுகட்குமிடையே சிலவெழுத்துஞ் சிலபதமும் ஒரோவிடத்துவரும்; வரின் அவைசாரியை யெனப்படும். ஆகையிற் சொன்ன மூவகைப்புணர்ச்சிகட்குப் பொதுச்சாரியை மேற்சொன்ன அம்முதற்பதினேழும் பிறவுமாம். (உ-ம்.) அ-தனக்கு, எ-கலனே தூணி, உ-சாத்தனுக்கு, ஐ-மற்றையவர், கு-மொழிகுவான், ன்-ஆன்கன்று, அன்-ஒன்றன்கூட்டம், ஆன்-இருப்பான், இன்-வண்டினை, அல்- நறுந்தொடையல்சூடி, அற்று-பலவற்றை, இற்று-பதிற்றுப்பத்து, அத்து-நிலத்தியல்பு, அம்- புளியங்காய், தம்-எல்லார் தம்மையும், நம்-எல்லாநம்மையும், நும்-எல்லீர்நும்மையும், எனமுறையே பதினேழுசாரியை வந்தவாறுகாண்க. இவைபோல்வனபலவு முளவெனக் கொள்க. ஆயினும் இவற்றிற்கெல்லா மொருவழியன்றி ஒன்றற்கொன்றும் இரண்டும் வருதலு மொன்றும் வாராமையும் ஒன்றற்கோரிடத்து வருதலு மோரிடத்து வாராமையுமாம். (உ-ம்.) பதப்புணர்ச்சிக்கண்: மலையுச்சி - அலங்கல்வேல், சாரியையின்மை; மனவூக்கம் - மனத்தாண்மை, ஒன்றன் கண்வந்ததும் வாராமையும்; விகுதிப்புணர்ச்சிக்கண்: மலையான்-ஊரான், சாரியையின்மை; வெற்பன்-வெற்பினன், வில்லன்-வில்லினன், ஒன்றன் கண் வந்ததும் வாராமையும்; இனியுருபு புணர்ச்சிக்கண்: மலையை - புகழை, சாரியையின்மை; நிலத்துக்கு-நிலத்துக்கண்-நிலத்திற்கு-நிலத்தின்கண், மீளவும் நிலக்கு - நிலக்கண், ஒன்றன்கண்ணொன்றுமிரண்டும் வந்ததுமொன்றும் வாராமையும் வந்த வழியேகாண்க. ஆகையி லேற்குமிடங்களை யறிந்து வேண்டுவன வருவித்துப்புணர்க்க. என்னை. - நன்னூல். "பதமுன் விகுதியும்பதமுமுருபும் புணர்வழியொன்றும் பலவுஞ்சாரியை வருதலுந்தவிர்தலும் விகற்பமுமாகும்." எ-து. மேற்கோள். எ-று. (12) | முதலோத்துச் சொற்பொதுவியல். - முற்றிற்று. ~~~~~ இரண்டாமோத்துப்பெயர். NOUNS. முதலாவது:- வேற்றுமையியல். Chapter I - Cases. | 53. | பெயரேவேற்றுமை பெற்றிடம்பாறிணை காட்டித்தொழிலல காலங்காட்டா மரபுகாரண மாக்கங்குறியென் றவைநாற்றகுதி யாகுமென்ப. | |
|
|