(இ-ள்.) மேலேவகுத்துக்கூறிய நால்வகைச்சொற்களு ளிவ்வோத் தின்கண்ணே பெயர்ச்சொல்லியல்பினை விளக்குதும். பெயரெனப்படுவன இனிவரும் வேற்றுமையுருபுகளைக் கொள்வதற்கு உரியனவாகி மேற்காட்டியமூவிடம் இருதிணைஐம்பால் என்றிவற்றைக்காட்டித் தொழிலின் காரணமாக வரும்பெயர் காலங்காட்டுவதன்றியே அல்லனவெல்லாங் காலங் காட்டாமல் வருமெனக்கொள்க. அன்றியு மரபுபெயரும், காரணப்பெயரும், ஆகுபெயரும், இடுகுறிப்பெயரும் என நால்வகைப்படும் பெயரெல்லாமெனக்கண்டுணர்க. இவையே பொருட்பெயரும், வினையாலணையும் பெயரும், தொழிற்பெயரும், பண்புப்பெயரும் என இந்நால்வகை யுள்ளடங்கும். (உ-ம்.) பொன்னன் - பொருட்பெயர், உண்டவன் - வினையாலணையும்பெயர், நடத்தல் - தொழிற்பெயர், சண்டை, கூத்து, வேட்டை, முதனிலையில்லாத தொழிற்பெயர்கள். கருமை பண்புப்பெயர், எ-று. (1) | 54. | காரணமில்லன மரபுபெயரே காரணங்காட்டிக் காரணப்பயன்கொளல் காரணப்பெயரே காரணங்காட்டா ததன்பயன்கொள்வ தாகுபெயரே காரணங்காட்டினுங் காரணப்பயன்கொளா விடுகுறிப்பெயரா மென்பகற்றோரே. | | (இ-ள்.) கூறியநால்வகைப் பெயர்களு மிவையெனயுணர்த்துதும். இவற்றுட்காரண மின்றிப் பொருளின் இயல்பினைக்குறித்து வருவன மரபு பெயரெனப்படும். (உ-ம்.) மகன், மகள், கரி, பரி, பொன், மணி, வான், நிலம், அகம், புறம், இரா, பகல், வருடம், மாதம், கால், தலை, தளிர், பூ, காய், கனி, வட்டம், நீளம், வெம்மை, தண்மை, ஊண், தின், ஆடல், பாடல் என்பன மரபு பெயர். அன்றியும் பொருள், இடம், காலம் சினை, குணம், தொழில், கருத்தா, மிகுதி என எண் காரணங்களால்வந்து அவற்றின் பயன்கொள்வன காரணப் பெயரெனப்படும். (உ-ம்.) தமன், நமன், நுமன், எமன் என சுற்றத்தால்வருபெயரும்; ஒருவன் என எண்ணால்வருபெயரும்; அவையத்தான், அத்திகோசத்தான் என குழுவால் வருபெயரும்; வில்லினன், பூணினன் முதலிய பெயரும் பொருட்கார ணப்பெயர்களாம். வெற்பன், பொருப்பன் என குறிஞ்சித்திணையால்வரு பெயரும்; மறவன், எயினன் என பாலைத்திணையால் வருபெயரும்; ஆயன், அண்டன் என முல்லைத்திணையால்வருபெயரும்; ஊரன், உழவன் என மருதத்திணையால் வருபெயரும்; சேர்ப்பன், பரதவன் என நெய்தற்றிணையால்வருபெயரும்; காவலூரான், கருவூரான் என ஊரால்வருபெயரும்; அருவாளன், சோழியன் என தேயத்தால் வருபெயரும்; வானத்தான், விசும்பான் என வானால்வரு பெயரும்; மண்ணகத்தான், பாதலத்தான் |
|
|