முதலாவது:- எழுத்ததிகாரம். PART I. - LETTERS முதலாவதெழுத்தியல். Chapter I - Nature of Letters | 2. | தோற்றமும்வகுப்புந் தோன்றும்விகாரமுஞ் சாற்றுளித்தோன்றுந் தானெழுத்தியல்பே. | | (இ-ள்.) எழுத்திலக்கண மாமாறுணர்த்துதும். எழுத்தின் றோற்றமும் வகுப்பும் விகாரமும் என்றிம்மூன்றனுள் எழுத்து வகைப்பாடெல்லா மடங்கும். என்னை, தோற்றமென்புளி, எழுத்துப்பிறக்குமிடமும்,முறையும், எண்ணுமெனவும்; வகுப்பென்புளி, முதல்சார்புயிர் மெய்முதலியகூறுபாடெனவும்; விகாரமென்புளி, பதத்திலும்புணர்பிலும் வருந்திரிபாக்கமுதலியவேறு பாடெனவுந்தோன்றும், எ-று.உளி எ-து.இடம், உழியென்பாருமுளர். (1) | 3. | உயிரிடை யினமிடறுரம்வலியுச்சிமெலியியை முதலிடமாயிதழ் மூக்கணம்பன்னா வைந்துணையிடத்தா மக்கரப்பிறப்பே. | | (இ-ள்.) எழுத்தின்றோற்ற மாமாறுணர்த்துதும். உதானவாயுவின் காரணமாக எழுத்தெல்லாம் பிறக்குமாயினும் அவற்றுட்பன்னீருயிர்க்கும், ஆறிடை யினத்திற்கும், மிடறேமுதலிடமாகவும்; ஆறுவல்லினத்திற்கும், நெஞ்சே முதலிடமாகவும்; ஆறுமெல்லினத்திற்கும், உச்சியேமுதலிடமாகவும்; அன்றி உதடும், மூக்கும், அண்ணமும், பல்லும், நாவும் என விவ்வைந்தே துணையிடமாகவும்; எழுத்தெல்லாம் பிறக்குமென்றுணர்க. ஆயினும் இவற்றையும் எழுத்தின்முறையையும் எண்ணையும் உணர்த்துவ துறுபயனின்றிப் பொழுதழிவாகையானும், இனிச் சிலவுரைப்பது முறையா மென்றமையானும், இங்ஙன மவற்றைநீக்கி எழுத்தின்வகுப்பும் விகாரமுமென மற்றிரண்டையும் விளக்கிக்கூறுதும். இதன் விரிவையுணரவேண்டில் தொல்காப்பியத்துட் காண்க. அதனினும்விரிவு பேரகத்தியம் நன்னூல், எ-று. (2)முதலாவதெழுத்தின் தோற்றம். - முற்றிற்று. |
|
|