66. | "எல்லாமென்ப திழிதிணையாயி னற்றோடுருபின் மேலும்முறுமே யன்றேனம்மிடை யடைந்தற்றாகு மெல்லாருமெல்லீரு மென்பவற்றும்மை தள்ளிநிரலே தம்நும்சாரப் புல்லுமுருபின் பின்னரும்மே." | | (இ-ள்.) இதுவுமது. எல்லாமெனும் பெயர் அஃறிணையானகாலை அற்றுச்சாரியையு முருபின்மே லும்மையும் பெறும். (உ-ம்.) எல்லாவற்றையும் - எல்லாவற்றோடும், எ-ம். அவ்வாறடைமொழியாக வரினுமாம். (உ-ம்.) எல்லாவற்றுத்தலையும் - எல்லாவற்றுக்காதும், எ-ம். அதுவே உயர்திணையானகாலை இடையே நம்மெனுஞ்சாரியை யுருபின் மேலும்மும்பெறும். (உ-ம்.) எல்லாநம்மையும் - எல்லாநம்மாலும் எ-ம். அவ்வாறடைமொழியாக எல்லாந்தலையும் - எல்லாங்காதும், எ-ம். அன்றியும், எல்லாரு மெல்லீருமென இருமொழியுமீற்றும்மை ஒழிந்து முறையே தம் நும் எனச்சாரியையு முருபின்மேலும்மையும் பெறும். (உ-ம்.) எல்லார் தம்மையும் - எல்லார்தம்மாலும், எ-ம். எல்லீர் நும்மையும் - எல்லீர் நும்மாலும், எ-ம். அவ்வாறடை மொழியாக எல்லார்தங்காதும் - எல்லீர்நுங்காதும், எ-ம். வரும். பிறவுமன்ன எ-று. (14) | 67. | "ஆமாகோனவ் வணையவும்பெறுமே." | | (இ-ள்.) இதுவுமது. ஆ, மா, கோ என்னு மிம்முப்பெயரும் னவ்வெனுஞ் சாரியைபெற் றாறுருபோடு புணரும். (உ-ம்.) ஆன், மான், கோன், ஆனை, மானை, கோனை, ஆனால். மானால், கோனால், எ-ம். பிறவுமன்ன. அவ்வாறடைமொழியாக ஆன்கன்று, மான்றலை, கோன்குணம், எ-ம். வரும். பிறவுமன்ன. இங்ஙன மா, எ-து. விலங்கு, மரம், இவையெனக் கொள்க. அன்றியும், னவ்வணையவுமென்றமையா லச்சாரியை யணையாமலும் பொது வழியால் உருபு பெற்றுவரும். (உ-ம்.) ஆவை, ஆவினை, மாவை, மாவினை, கோவை, கோவினை, எ-ம். வரும். பிறவுமன்ன. எ-று. (15) | 68. | "தான் தாம் நாமுதல் குறுகும்யான்யாம் நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற குவ்வின் அவ்வரு நான்காறிரட்டா." | | (இ-ள்.) இதுவுமது. தான், தாம், நாம், என முப்பெயரு முதலுயிர்குறுகி, தன், தம், நம் எனவாகி ஐம்முதலாறுருபுகளைப் பெறும். அன்றியும் யான் எ-து. என், யாம் எ-து, எம் நீ எ-து. நின், நீர் எ-து. நும், எனவாகி அவ்வுருபுகளைப் பெறும். அன்றியும், குவ்வெனு நான்காம் வேற்றுமையில் அ எனுஞ்சாரியைபெற்றுக் ககரமிரட்டும். அன்றியு மெழுத்தின் விகாரங்களுட்சொன்னபடி |
|
|