உயர்திணைப் பெயரில் வந்தவிளி, புறாவழகியை, தும்பியினியை, வீகொடியை, வண்டுகொடியை, பூக்கொடியை, சேக்கொடியை, வாடைகொடியை, நோக்கொடியை, அன்னங்கூறாய், மான்கூறாய், பேய்கொடியை, சூர்கொடியை, வேலிகொடியை, யாழினியை, தேள்கொடியை, இயல்பாயின. புறாவே, சுறாவே, கிளியே, அளியே, ஏகாரமிக்கன. கிளீ, தும்பீ, இகரமீகாரமாயின. இவை அஃறிணைப் பெயரில் வந்தவிளி. பிதாவுரையாய், நம்பிநல்காய், ஆண்கூறாய், தாய்கேளாய், இயல்பாயின. ஆணே, பெண்ணே, தாயே, பிதாவே, ஏகாரமிக்கன. சாத்தீ, கொற்றீ, இகரமீகாரமாயின. இவை பொதுப்பெயரில் வந்தவிளி, மன்னேயென்றமிகையால், இவ்வுருபுகள் சிலவற்றிற்குப் பொருந்தாமையாயினுஞ்கொள்க. எ-று. (18) | 71. | "ஐயிறுபொதுப்பெயர்க் காயுமாவு முருபாமல்லவற் றாயுமாகும்." | | (இ-ள்.) ஐகாரவீற்று முப்பெயர்க்கும் விளியுருபா மாறுணர்த்துதும். ஐகாரவீற்றுப் பொதுப்பெயர்க்கு ஆய், ஆ, உருபாம். உயர்திணை அஃறிணைப் பெயர்க்கு ஆய், உருபாம். (உ-ம்.) அன்னை, அன்னாய் - அன்னா, பொதுப்பெயர்க்கு ஆயும் - ஆவும் வந்தன. விடலை - விடலாய், மடந்தை - மடந்தாய், என உயர்திணைப்பெயர்க்கு ஆய், வந்தது. நாரை - நாரையாய், கொன்றை - கொன்றாய், என அஃறிணைப்பெயர்க்கு ஆய்வந்தது. எ-று. (19) | 72. | 'ஒருசார்னவ்விற் றுயர்திணைப் பெயர்க்கண் ணளபீறழிவய னீட்சியதனோ டீறுபோதலவற் றோடோவுற லீறந்தோவர லிறுதியவ்வாத லதனோடயறிரிந் தேயுறலீறழிந் தயலேயாதலும் விளியுருபாகும்." | | (இ-ள்.) னகாரவீற்றுயர்திணைப்பெயர்க்கு விளியுருபாமாறுணர்த்து தும். னகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கு விளி உருபு:- அளபெழல், ஈறழிவு, அயனீளல், அயனீண் டீறுகெடுதல், ஈறுகெட்டய னீண்டோகாரமிகல், ஈறழிந்தோகாரமிகல், இறுதியவ்வாதல், இறுதியவ்வாயீற்றயலாகார மோகாரமா யேகாரமிகல், ஈறழிந்தயலிலகர மேகாரமாதல், இவையாகும். (உ-ம்.) கீழான் - கீழா அன், பெருமான் - பெருமா அன், அளபெழுந்தன. இறைவன் - இறைவ, நாதன் - நாத, ஈறழிந்தன. ஐயன் - ஐயான், நம்பன் - நம்பான், அயனீண்டன. இறைவன் - இறைவா, மன்னன் - மன்னா, அயனீண்டீறுகெட்டன. ஐயன் - ஐயாவோ, நண்பன் - நண்பாவோ, ஈறுகெட்டய னீண்டோகாரமிக்கன. திரையன் - திரையவோ, பெருமான் - பெருமாவோ, ஈறழிந்தோகாரமிக்கன. மலையான் - மலையாய், பூணான் - பூணாய், உண்டான் - |
|
|