79. | பலர்பால்ரவ்வுங் கள்ளுமீறுமே. | | (இ-ள்.) பலர்பாலென்ற வுயர்திணைப் பன்மைக்குருபா மாறுணர்த்துதும். பலர்பாலென்ற வுயர்திணைப் பன்மைக்கு உருபு:-ர், கள், எனவிரண்டுமாம். (உ-ம்.) தமர், நமர், நுமர், எமர், பிறவும். கிளைப்பெயர் பூணினர், முடியினர், வெற்பர், கானவர், பார்ப்பார், பிரமர், சத்திரியர், வைசியர், சூத்திரர் பிறவும். ரவ்வீற்றுப்பலர்பால் அடிகள், முனிகள், மனுக்கள், கோக்கள், வேள்கள், விடலைகள், மடந்தைகள் பிறவும். கள்ளீற்றுப் பலர்பால் அவ்வீருருபுகூட்டிப் பலர்கள், அரசர்கள், எ-ம். வரும். பிறவுமன்ன. எ-று.(27) | 80.. | ஒன்றுதுவ்வுறின் அ ன ஐயும் பலவின்பாலீறுங் கள்ளீறுமற்றவை யன்றியுமிருமைக் கஃறிணைப்பொதுவே. | | (இ-ள்.) பலவின்பாலென்ற அஃறிணைப் பன்மைக்குருபா மாறுணர்த்துதும். ஒருமைக்கண்ணே விகுதியாகவே து, என்னு முருபேற்ற அஃறிணைப் பெயரெல்லாம் பன்மைக்கண், அ, ன, ஐ, எனவிம்மூன்றுருபுகளைப் பெற்றுமுடியும். (உ-ம்.) எப்பொருளது என்றதற்கு, எப்பொருள - எப்பொருளன - எப்பொருளவை, எ-ம். முதலது என்றதற்கு, முதல - முதலன - முதலவை, எ-ம். அரியது என்றதற்கு அரிய, அரியன், அரியவை, எ-ம். இவ்வாறேஉள்ள-உள. இல்ல-இல, பல்ல-பல, சில்ல-சில, எ-ம். இவைபோல்வனபிறவு மஃறிணைப் பன்மையாம். மற்றவஃறிணைப் பெயர்கட்கு. கள், பன் மைக்கண்ணுருபாம். (உ-ம்.) நிலங்கள், நீர்கள், நரிகள், நாய்கள் பிறவுமன்ன. ஆயினுமிவ்விரண்டாம் வகைப்பெயரெல்லா முருபுமாறாமலு மொருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்பனவாம். (உ-ம்.) மரம்வளர்ந்தது - மரம்வளர்ந்தன, கனியினது - கனியினியன, மாடுவந்தது - மாடுவந்தன, பிறவுமன்ன. - நன்னூல். - 'பால் பகா வற்றிணைப் பெயர்கள் பாற்பொதுமைய.' எ-து. - மேற்கோள். எ-று. (28) | 81.. | "ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையு மோரிடம் பிறவிடந் தழுவலு முளவே." | | (இ-ள்.) பால்வழுவமைதியு மிடவழுவமைதியுமா மாறுணர்த்துதும். ஒருமைப்பாலிற் பன்மைப்பாலும் பன்மைப்பாலி லொருமைப்பாலும் ஓரி டத்திற் பிறவிடமுந் தழுவிக் கூறலுளவாம். (உ-ம்.) தீயெரிந்தன, நீரிருந்தன, பாலிருந்தன. என ஒருமைச்சொல் பன்மைதழுவின. நாடெலாம்வாழ்ந்தது, படையெலாமொய்த்தது, கண்சிவந்தது, உள்ளியதெல்லா முடன்வந்தடைந்தது, எனப்பன்மைச்சொல் ஒருமைதழுவின. நீயோ வவனோ யாரிதுசெய்தார். யானோ வவனோ யாரிது செய்தான், என ஓரிடத்துக்குரிய சொல்லே பிறவிடந்தழுவின. பிறவுமன்ன. எ-. (29) |
|
|