சொன்ன ஐவகைத் தொகையிலொன்று வந்ததனிறுதி மற்றொரு பெயரேயாயினும் பகுபதவிகுதியாயினுந் தொக்குநிற்பது அன்மொழித் தொகையும், எனத்தொகை நிலைமொழி அறுவகைப்படும். (உ-ம்.) நிலங்கடந்தான், பொற்குடம், வேற்றுமைத்தொகை. பொருகளம், வாழ்குடி, வினைத்தொகை, நறுமலர், ஆனித்திங்கள் குணத்தொகை. பொன்மேனி, மலர்க்கை உவமைத்தொகை. இவனவன், ஆறுநான்கு, உம்மைத்தொகை. தாழ்குழல், பூங்குழல், அன்மொழித்தொகை. சொன்னதொகையெலாம்விரிக்குங்கால், நிலத்தைக்கடந்தான், பொன்னாலாயகுடம், எ-ம். பொருதகளம், பொருகின்றகளம் - பொருங்களம், எ-ம். வாழ்ந்தகுடி - வாழ்கின்றகுடி - வாழுங்குடி, எ-ம். நறவாகியமலர் - ஆனியாகியதிங்கள், எ-ம். பொன்போலு மேனி - மலர்போலுங்கை, எ-ம். இவனுமவனும், ஆறும்நாலும், எ-ம். பூவையணிந்த குழலாள், எ-ம். வரும். அன்றியும் பூங்குழல், பொற்றடி கவியிலக்கணம், பொற்றாலி, கிள்ளிகுடி, கீழ்வயிற்றுக்கழலை, முறையேஐம்முதலாறு வேற்றுமைத் தொகைநிலைக்களத்துப் பிறந்த வன்மொழித்தொகைகள். தாழ்குழல், வினைத்தொகை நிலைகளத்துப் பிறந்த வன்மொழித்தொகை. கருங்குழல், பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த வன்மொழித்தொகை. துடியிடை, உவமைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த வன்மொழித்தொகை துடியிடை, உவமைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த வன்மொழித்தொகை, உயிர்மெய், உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த வன்மொழித்தொகை. தகரஞாழன்முலை, பன்மொழித்தொடர். பூங்குழல் என்புழி, பூவையணிந்த குழலென வேற்றுமைத் தொகையாய் அக்குழலையுடையாளை யுணர்த்துங்கா லன்மொழித் தொகையாம். பிறவுமன்ன. - தொல்காப்பியம். - "அவற்றுள் வேற்றுமைத்தொகையே வேற்றுமையியல உவமைத் தொகையே வுவமையியல. - வினையின்றொகுதிகாலத்தியலும். - வண்ணத்தின் வடிவினளவிற் சுவையினென், றன்னபிறவு மதன்குணநுதலி, யின்னதிதுவெனவரூஉமியற்கை, யென்ன கிளவியும் பண்பின் றொகையே. - இருபெயர் பலபெய ரளவின்பெயரே, யெண்ணியிற்பெயரே நிறைப்பெயர்க்கிளவி, யெண்ணின்பெயரோ டவ்வறுகிளவியுங், கண்ணிய நிலைத்தே யும்மைத்தொகையே. - பண்புத்தொகை வரூஉங்கிளவியானு, மும்மைதொக்கப்பெயர்வரினானும், வேற்றுமைதொக்கப் பெயர்வரினானு, மீற்றுநின்றிய லுமன்மொழித்தொகையே." இவைமேற்கோள். எ-று. (2) | 90. | தொகைநிலை விரித்துச் சொல்லுங் காலெழு வகைநிலை யளவும் வகுக்கப் படுமே. | | (இ-ள்.) தொகைநிலைத் தொடர்மொழிகளுருபுத்தொக்கு நிற்கையாற் சிலபொருள்களான் மயங்குமாறுணர்த்துதும். சிலதொகை மொழிகளொரு தொடராக நிற்பினும் இரண்டு முதலாக வேழீறாகப் பலவகை விரிவுகொள் ளுமென்றுணர்க. (உ-ம்.) அலர்முல்லை என்பதில், அலர்ந்தமுல்லை - அலரை விரித்தமுல்லை, என இருபொருள் விரிந்தன. ஒலிவளை என்பதில், |
|
|