| லாதிநீ டலடிய கரமை யாத றன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரித லினமிக லினையவும் பண்பிற் கியல்பே. | | (இ-ள்.) குணப் பெயர்த் தொகைக்குச் சிறப்புவிதியா மாறுணர்த்து தும். - நன்னூலில். - "செம்மை சிறுமை சேய்மை தீமை, வெம்மை புதுமை மென்மை மேன்மை, திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதி, ரின்னவும் பண்பிற் பகாநிலைப்பதமே." என்றார். இவற்றுள் ஈறுகெடுதலும், ஈறுகெட்டிடை யுகர மிகர மாதலும், ஆதிநீடலும், அடி யகர மைகாரமாதலும், தன்மெய் யிரட்டலும், முன்னின்ற மெய்திரிதலும், இனமிகுதலும், இவை போல்வன பிறவும் பண்பிற் கியல்பாகும். (உ-ம்.) நல்லன், நன்மையின் மையீறு கெட்டது. கரியன், கருமையின் மை யீறுகெட்டிடை நின்ற வுகரமிகர மாயிற்று; பாரிலை, பசுமையின் மை யீறுகெட்டாதி நீண்டது; பைங்கிளி, பசுமையின் மை யீறு மிடைநின்ற வுயிர் மெய்யுங் கெட்டு வருமெழுத்திற் கின மிகுந்தடி யகர மைகாரமாயிற்று; வெற்றிலை, வெறுமையின் மை யீறு கெட்டுத் தன் னொற்றிரட்டியது; சேதாம்பல், செம்மையின் மை யீறு கெட்டாதி நீண்டு முன்னின்ற மகரமெய் தகரமெய்யாகத் திரிந்தது; இனையவு மென்றமிகையால், அரியபொருள், பெரியமலை, கரியமுகம், புதியமணம், குறள்வெண்பா, எ-ம். வரும். எ-று. (5) | 93. | "அடைசினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய லீரடை சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே." | | (இ-ள்.) மரபுவழுவாமற் காத்தலு மரபு வழுவமைதியுமாமாறுணர்த்து தும். குணத்தொகை மொழியெலாம் அடைமொழி யெனப்படும். இவை வழக்கிடத்தில் ஒன்றும் இரண்டும் முதற்பொருளோடு வந்தடுக்கவும், ஒன்றே சினைப்பொருளோடு வந்தடுக்கவும் பெறும். (உ-ம்.) சிறுகருங்காக்கை, இளைம்பசுங்கிளி என முதற்பொருளோடு, ஈரடையடுத்துவந்தன. செங்கானாரை, நெட்டிலைத்தெங்கு, எனச்சினைப்பொருளோடு, ஓரடை யடுத்து வந்தன. செய்யுளிடத்தோ வெனில் சினைப்பொருளோடும் ஈரடையடுத்து வரப்பெறும். (உ-ம்.) சிறுபைந்தூவி, கருநெடுங்கண், எ-ம். வரும். அன்றியும், அடையொடு பலசினைப் பொருடம் முட்கலந்து செய்யுளிடத்து வரவும் பெறும். (உ-ம்.) நைடதம். - "குவிமுலைகயவாய்ச் செங்கட் குடம் புரைசெருத்தன் மேதி." எ-ம். வரும். அடைமொழியை வடநூலார் அவ்வியயம் என்பர். எ-று. (6) | 94. | ஓரொரு வீரிரு மும் மூ நாலை யைம் மாறறு வேழெழு வெண்ணென வியிருட வியைமுறைக் காகு மெண்ணின் றொகையே. | |
|
|