69 | பெயர். - தொகைநிலைத்தொடர்மொழிப்பெயரியல் | வரும். ஒரோவொன்று இதனுள் வகரமிரட்டா. - தொல்காப்பியம். - "ஒன்று முதலாகிய பத்தூர்கிளவி, யொன்றுமுதலொன் பாற்கொற்றிடைமிகுமே நின்றவாய்தங் கெடுதல்வேண்டும்." எ-து. மேற்கோள். எ-று. (10) | 98. | அளவின் றொகையா யளவொடு தொக்கியை கலங்கலனாகி யேயு மிகுமே யுரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட மருவும் டகர முரியின் வழியே யகர வுயிர்மெய்யா மேற்பன வரினே. | | (இ-ள்.) அளவின் பெயர்த்தொகையா மாறுணர்த்துதும். கலமென் பது மற்றோரளவின் பெயரோடு புணர்புழி ஈற்றுமகரம், னகரமாகத் திரிந்தபின் ஏகாரச்சாரியை பெறும். (உ-ம்.) கலம்-குறுணி, கலனேகுறுணி, முக்கலம்-தூணி, முக்கலனே தூணி, நாற்கலம் - இருதூணி, நாற்கலனேயிருதூணி, எ-ம். வரும். அன்றியும், நாழியின்கீழ் உரிவரின் ழி கெட்டு டவ்வாகி, நாழி-உரி, நாடுரி. எ-ம். வரும். அன்றியும் உரியின்கீழ் அதனால ளக்கப்பட்ட பொருட்பெயர்வரி னுயிர்முதனில்லாதாயின் யகரச்சாரியை பெற்று வல்லினமிகவு மற்றீரினமியல்பாதலுமாம். (உ-ம்.) உரி-கொள்ளு, உரியக்கொள்ளு, உரி-சாமை, உரியச்சாமை, வல்லினமிக்கன. உரிய மிளகு, உரியவரகு, மற்றீரினமிகாதியல்பாயின. உரியரிசி, உரியெண்ணெய், உயிர்வந்து சாரியைபெறாதும். உரியவுப்பு, உயிர்வந்து சாரியைபெற்றுவழங்கும். - தொல்காப்பியம். - "உரிவருகாலை நாழிக்கிளவி, யிறுதியிகர மெய் யொடுங்கெடுமே, டகாரவொற்றுமாவயினான்." எ-று. (11) | 99. | "திசையொடு திசையும் பிறவுஞ் சேரி னிலையீற் றுயிர்மெய் கவ்வொடு நீங்கலும் றஃகா னலவாய்த் திரிதலு மாம்பிற." | | (இ-ள்.) திசைத்தொகையா மாறுணர்த்துதும், திசைப் பெயர்த்தம் மூன்றாமேவரினும் பிறிதோர் பெயரொடு புணரினு முதனிலைப்பெயரீற்றி னின்ற கு, நீங்கியதன்மேற் கவ்வொற்றுளதே லதுவு மொழிந்து வருமின மிகாமற் புணருமெனக் கண்டுணர்க. (உ-ம்.) வடக்கு-கிழக்கு, வடகிழக்கு, வடக்கு-மேற்கு, வடமேற்கு, குணக்கு-கடல், குணகடல், குணக்கு-திசை, குணதிசை, எ-ம். வரும். குவ்வின்மேல் றகரம்வரின் னவ்வும் லவ்வுமாகத் திரியும். (உ-ம்.) தெற்கு-மலை, தென்மலை, தெற்கு-திசை, தென்றிசை, மேற்கு-வடக்கு, மேல்வடக்கு, மேற்கு-கடல், மேல்கடல் எ-ம். வரும். ககரமுதல்வரின் திரியும். பிறவென்றமிகையால் கிழக்கு-வடக்கு, கீழ் வடக்கு, கீழ்த்திசை, கீழ்த்துறை, கீழ்ச்சேரி, எ-ம். வரும். (இஃது நன்னூலில், கீழின்முன் வன்மை விகற்பமுமாக மென்னஞ் சூத்திரவிதி). |
|
|