(இ-ள். வினாவெழுத்தும் வினாப்பெயரு மாமாறுணர்த்துதும். எகரமும், யாவு மொழிக்குமுதலினும், ஆகாரமும் - ஓகாரமுமொழிக்கீற்றினும், ஏகாரமொழிக்கு முதலினு மீற்றினும் வினாவாகிவரும். (உ-ம்.) எவன், எவள், எவர், யாவன், யாவள், யாவர், இவை உயர்திணை முப்பால். எது - எவை, யாது-யாவை, இவை யஃறிணை யிருபால். எகரமும் யாவு மொழியகத்துவந்தன. எக்கொற்றன், யாங்ஙன, மொழிப்புறத்து வந்தன. நீயா, நீயோ, ஆகாரமும் ஓகாரமு மொழியீற்றிற் புறத்துவந்தன. எவன் - கொற்றனே, எகாரமுதலிலகத்து மீற்றிற் புறத்து வந்தது. அன்றியும், எகரமும், யாவு, மேற்கூறிய சுட்டெழுத்தைப்போல பிறபெய ரொடுபுணர்ந்து வினாவாம். (உ-ம்.) எ - குதிரை, எக்குதிரை, யா - செய்தி, யாச்செய்தி, எ-ம். வரும். யா, எ-து. வினாவெழுத் தாவதன்றி வினாச்சொல்லாகி வினையொடு புணரப்பட் டஃறிணை யிருபாலுக் கேற்பன. (உ-ம்.) குறள். - "யாகாவாராயினு நாகாக்ககாவாக்காற், சோகாப்பர் சொல் லிழுக்கப்பட்டு." எ-ம். வரும். அன்றியும், எவன் என்னும் வினாச்சொல்லஃறிணையிரு பாலிடத்து வினைக்குறிப்பாக வேற்கும். (உ-ம்.) எவனது, எவனவை, எ-ம். அன்றியும் வினைக்குறிப் பாகாமையும் ஏது, எனு மஃறிணை வினாவிற்கு எவன், என்பதுமாம். குறள். - "சிறைகாக்குங் காப்பெவன் செய்யுமகளீர் நிறைகாக்குங் காப்பேதலை." இப்பயன் கொண்டவனென்னும் வினாவென் னெனவுமாம். குறள். - "ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை, நாகமு யிர்ப்பக்கெடும், என வருதலுமறிக. - தொல்காப்பியம். - "ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா," எ-து. மேற்கோள். எ-று. (3)நான்காவது:- சுட்டுவினா. - முற்றிற்று. இரண்டாமோத்துப்பெயர். - முற்றிற்று. |