முதலாவது:-முக்காலமுற்றுவினை. Chapter I. - Tenses. | 105. | பொழுது கொள்வினை வினைப்பகு பதமே பகுதி யேவ லெனும்பகாப் பதமாகும் என்ஏன் எம்ஏம் ஓம்அம் ஆம்தன்மை ஐஆய்இ இர்ஈர் முன்னிலை அன்ஆன் அள்ஆள் அர்ஆர் உஅ படர்க்கை வினையின் விகுதி மீண்டுள பிறவுங் கள்ளெனப் பலவொழி பன்மையின் மிகலுமாம். | | (இ-ள்.) முக்கால வினைப்பகுதியும் விகுதியு மாமாறுணர்த்துதும். முக்கால முற்றுவினைச் சொல்லெல்லாம் பகுபதமாம். அவற்றுண் முதனிற்கும் நட, வா, முதலிய வேவல் வினைப்பகாப்பதங்களே முதனிலைகளாம். முதனிலை மூவகைப்படும். (உ-ம்.) வருதல் - வளர்தல், என்பதில் வரு-வளர், தன்வினை முதனிலை. அடித்தல் - அடுதல், என்பதில் அடி - அடு, பிறவினை முதனிலை. வெளுத்தான், என்பதில் வெளு - பொது வினைமுதனிலை பிறவுமன்ன. என், ஏன், விகுதி தன்மையொருமை. (உ-ம்.) வந்ததனென் - வந்தேன், யான், எ-ம். எம், ஏம், ஒம், அம், ஆம், விகுதி தன்மைப்பன்மை. (உ-ம்.) வந்தனெம் - வந்தேம் - வந்தோம் - வந்தனம் - வந்தாம், யாம், எ-ம். ஐ, ஆய், இ, விகுதி முன்னிலை யொருமை. (உ-ம்.) வந்தனை - வந்தாய், வந்தி-நீ, எ-ம். இர், ஈர், விகுதி முன்னிலைப் பன்மை. (உ-ம்) உண்டனிர் - உண்டீர், நீர், எ-ம். அன், ஆன், விகுதி யாண்பாற்ப டர்க்கை யொருமை. (உ-ம்.) வந்தனன் - வந்தான், அவன், எ-ம். அள், ஆள், விகுதி பெண்பாற்படர்க்கை யொருமை. (உ-ம்.) வந்தனள் - வந்தாள், அவள், எ-ம். அர், ஆர், விகுதி பலர்பாற் படர்க்கை. (உ-ம்,) வந்தனர் - வந்தார், அவர், எ-ம். உ, விகுதி யொன்றன்பாற் படர்க்கை. (உ-ம்.) வந்தது, அது, எ-ம். அ, விகுதிபலவின்பாற் படர்க்கை. (உ-ம்.) வந்தன, அவை, எ-ம். வரும். இவைமுக்கால முற்றுவினைக்குப் பொது விகுதிகளாம். பலவின்பா லொழித்தொழிந்த பன்மை விகுதிகட் கெல்லா மீற்றின்கண்ணே கள், என்னும் விகுதிகூட்டி வரவும் பெறும். (உ-ம்.) வந்தனர்கள், வந்தார்கள், எனவரும். பிறவென்ற மிகையால் கொண்மார், நடப்ப, எ-ம். வரும். - தொல்காப்பியம். - "க ட த ற வென்னுமந் நான் கூர்ந்த குன்றிய, லுகரமோ டென்னே னல்லன் வரூஉமேழுந், தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே." - நன்னூல். - "ஐயா யிகர வீற்றமூன்று, மேவலின் வரூஉ மெல்லா வீற்றவு, முப்பா லொருமை முன்னிலை மொழியே. - இர் ஈரீற்ற விரண்டு மிருதிணைப் பன்மை முன்னிலை மின்னவற்றேவல்." இவை மேற்கோள். எ-று. (1) |
|
|