அன்றியும் பலவின்பாலிடத்துக் கள்ளெனக் கூட்டலுமாகும். (உ-ம்.) அவையுண்ணுங்கள், இடுங்கள், என வரும். - சிந்தாமணி. - ``அல்லித்தாளற்றபோது மறாதநூலதனைப்போலத், தொல்லைத் தம்முடம்பு நீங்கத் தீவினைதொடர்ந்து நீங்காப், புல்லிக்கொண்டு யிரைச் சூழ்ந்து புக்குழிபுக்கு பின்னின், றெல்லையிறுன்ப வெந்தீச்சுட்டெ ரித்திடுங்களன்றே.ழுழு என வரும். - தொல்காப்பியம். - ``பல்லோர்படர்க்கை முன்னிலைதன்மை, யவ்வயின் மூன்று நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடுகொள்ளா.ழுழு எ-து. மேற்கோள். எ-று. (3) | 108. | இறந்த காலத் திடைநிலை தட றவொற் றின்னே மூவிடத் தைம்பாற் கேற்பன. | | (இ-ள்.) இறந்தகாலத் திடைநிலைகளா மாறுணர்த்துதும். த், ட், ற், என மூன்று மெய்யும் இன், னும் இறந்தகால வினையிடைநிலைகளாம். (உ-ம்.) நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தேம், நடந்தாய், நடந்தீர், எ-ம். உண்டான், எ-ம். சென்றான், எ-ம். உறங்கினான், எ-ம். வரும். என்மனார், என்றிசினோர், போனது, என வருதலு மறிக. எ-று. (4) | 109. | நிகழ்பொழு தாநின்று கின்று கிறுவென வைம்பான் மூவிடத் தாமிடை நிலையே. | | (இ-ள்.) நிகழ்காலத்திடை நிலைகளாமாறுணர்த்துதும், ஆநின்று, கின்று, கிறு, எனமூன்றும் நிகழ்கால வினையிடைநிலைகளாம். (உ-ம்.) நடவா நின்றான், நடவாநின்றாள், நடவாநின்றார், நடவாநின்றது, நடவாநின்றன, எ-ம், நடக்கின்றேன், எ-ம். நடக்கிறாய், எ-ம். வரும். உண்ணா கிடந்தான், உண்ணாவிருந்தான், என வருதலுமறிக. எ-று. (5) | 110. | எதிர்வருங் காலத் திடைநிலைப் பவ்வ வைம்பான் மூவிடத் தாமிவை சிலவில. | | (இ-ள்.) எதிர்காலத்திடைநிலைகளா மாறுணர்த்துதும். ப், வ், என இரண்டுமெய்யும் எதிர்கால வினையிடை நிலைகளாம். (உ-ம்.) நடப்பான், நடப்பாள், நடப்பார், நடப்பது, நடப்பன, எ-ம். வருவேன், வருவான், எ-ம். வரும். சிலவிலவென்ற மிகையால் சிலவினைமொழிகளிடை நிலையின்றிவரவும் பெறுமெனக்கொள்க. இவற்றையினிக் காட்டுதும். எ-று. (6) | 111. | எதிர்கால விகுதியு ளொருமைத் தன்மை குடுதுறு வென்னுங் குற்றிய லுகரமோ டல்லன் னென்னே னாமெண் ணீறே பலர்பாற் காகும் பமார் மருமனார். | |
|
|