கூற்றே. - தாலென் கிளவி யொப்போன் கூற்றே. - கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே." எ-று. (3) | 116. | வியங்கோ ளியலும் விகுதிக் கவ்விய யவ்வொடு ரவ்வொற்று மிவையெங்கு மேற்பன "வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய் யேகலு முரித்தஃ தேகினு மியல்பே." | | (இ-ள்.) வியங்கோள் விகுதிகளாமாறுணர்த்துதும். க, ய, ர், விகுதிமூ விடத்தைம்பாற்கண்ணு மேற்கும்வியங்கோளாம். (உ-ம்.) வாழ்க, வாழிய, வாழியர், எ-ம். நான்வாழ்க, நீவாழ்க, அவன்வாழ்க, அவள்வாழ்க, அவர்வாழ்க, அதுவாழ்க, அவைவாழ்க, எனவரும். மற்றவிகுதியு மிவ்வாறொட்டுக. அன்றியும், வாழியவென்னும் வியங்கோளீற்று யகரங்கெட்டுவாழி யெனவரின் வல்லினமிரட்டா. (உ-ம்.) வாழிகொற்ற, வாழிதேவ, வாழிபூத, வாழி செல்வ, என வரும். - நன்னூல் - 'கயவொடு ரவ்வொற்றீற்ற வியங்கோ ளியலுமிடம்பாலெங்குமென்ப. - வாழியவென்பத னீற்றனுயிர்மெய், யேகலுமுரித் தஃதேகினு மியல்பே.' இவைமேற்கோள். எ-று. (4)இரண்டாவது:-ஏவல்வியங்கோள்.-முற்றிற்று. | மூன்றாவது:-ஈரெச்சம். Chapter III. - Participles. | 117. | எச்சமே தொழில்பொழு தென்றிவை தோன்றி யிடம்பா றொன்றா தெஞ்சிய வினையென விவற்றுட் பெயர்சேர்ந் தியலும் பெயரெச்சம் வினையொடு புணர்வது வினையெச் சம்மே. | | (இ-ள்.) ஈரெச்சங்களா மாறுணர்த்துதும். தொழிலுங் காலமுந் தோன்றி இடமும்பாலுந் தோன்றாதுவருவன வெல்லா மெச்சமெனப்ப டும். ஐம்பான்மூவிடஞ் செய்பவன் முதலிய வறுபொருட் பெயரொடுபு ணரப்படுவன வெல்லாம் பெயரெச்சமெனப்படும். வினையொடு புணரப்ப டுவனவெல்லாம் வினையெச்ச மெனப்படும். (உ-ம்.) உண்ட, உண்கிற, உண்ணும், எனநிறுத்தி, அவன், அவள், அது, அவை, நான், நீ, இவை கூட்டுக. அன்றியும், உண்டசாத்தான் - வினைமுதற்பெயர், உண்டகலம் - கருவிப்பெயர், உண்டவிடம் - இடப்பெயர், உண்டவுணல் - தொழிற்பெயர், உண்டநாள் - காலப்பெயர், உண்டசோறு - செயப்படு பொருட்பெயர், இவை தெரிநிலை வினைப்பெயரெச்சம். கரியகுதிரை, பெரியகளிறு, முகத்தயானை, படத்தபாம்பு, நெடியவில், தீயசொல், புதியநட்பு, இவை குறிப்புவினைப்பெயரெச்சம். |
|
|