களைகட்டபயிர், களைகட்டகூலி, எனஇன்னதற்கிதுபயனும்; உண்டவிளைப்பு, குடிப்போனவூர், எனப்பிறபெயரெஞ்சுதலுமறிக. பெயரெச்சவாய்பாடுகள்:- செய்த, செய்கின்ற, செய்யும், எனமூன்றாம். இவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு, முக்காலத்தின்வரும். (உ-ம்.) பட்டபகை, படுகின்றபகை, படும்பகை, எனவரும். உண்டுபோனான், உண்ணப்போனான், உண்டக்கால்வருவான், இவைமுக்காலத்து வினையெச்சம். வினையெச்ச விகற்ப மினிக் காட்டுதும். - நன்னூல். - "செய்த செய்கின்ற செய்யுமென்பாட்டிற், காலமுஞ்செயலுந் தோன்றிப் பாலொடு, செய்வதாதியறுபொருட்பெயரு, மெஞ்ச நிற்பது பெயரெச் சம்மே." - அகத்தியம். - "காலமும் வினையுந்தோன்றிப் பாறோன்றாது, வினைகொள்ளு மதுவினையெச்சமே. - காலமும் வினையுந்தோன்றிப் பாறோன்றாது, பெயர் கொள்ளுமது பெயரெச்சம்மே." இவைமேற்கோள். வடநூலார் பெயரெச்சம் - சந்திராந்தம், எ-ம். வினையெச்சம் - துவாந்தம், எ-ம். கூறுவர். எ-று. (1) | 118. | உம்மீற்ற வெச்சத் தீறு மீற்றய லுயிரு முயிர்மெய்யு மொழிதலாஞ் செய்யுட் கும்முந் தாதலு மொக்கு மென்ப. | | (இ-ள்.) பெயரெச்சத்திற்குச் சிறப்புவிதியா மாறுணர்த்துதும். உம் மெனமுடியும் எதிர்காலப் பெயரெச்சந் தொக்குநின்று ஈற்றுமகரமு மீற்றயலுகரமு முகரத்தோ டதன்மெய்யும் வேண்டுழிக் கெடுதலாம். இங்ஙனந்தொக்குநிற்புழி முக்காலத்துக்கு மேற்பன. (உ-ம்.) செய்யுந்தொழில் எ-து. செய்யுதொழில் - செய்தொழில், எ-ம். வாழுங்குடி, எ-து. வாழுகுடி - வா ழ்குடி, எனவரும். இவற்றைவிரிக்குங்காலை, வாழ்ந்தகுடி - வாழாநின்றகுடி - வாழுங்குடி, எனமுக்காலத்துப் பொருளனவாம். இவ்வா றொருகாலமுந் தோன்றாது தொக்குநிற்பவே இப்பெயரெச்சங்கள் வருங்கால வினைத்தொகை யெனப்படும். (உ-ம்.) ஆகும், எ-து. ஆம், எ-ம். போகும், எ-து. போம். எ-ம். ஈற்றுமகர நின்றதனால் இவை எஞ்சினும் வினைத்தொகை யெனப்படா. இஃதன்றியே செய்யுளிடத்தில் ஈற்றின்கண்ணே, து, கூட்டி உம், உந்து, ஆகவும் பெறுமெனக் கொள்க. (உ-ம்.) செய்யும், செய்யுந்து, வாழும், வாழுந்து, எ-ம். 'புணரிநீர்சூழுந்து பூவுலகில்யாவு, முணரினினக்கில்லை யொப்பு.' எ-ம். பிறவுமன்ன. எ-று. (2) | 119. | வினையெச் சங்கொள் விகுதி இ உ உவ்வோ டெனவும் ஊபுஆ விறப்பே அஇரு கருத்தா வணையி னிகழ்வே யொருகருத் தாவு மோரிடத் திரண்டு மியைஅ வன்றி இல்இன் இயஇயர் வான்பான் பாக்கு வரும்பொழு தாம்பிற. | |
|
|