குழீஇ யினமலர் பொறாக்கொடிக ளூசல்கொண், டெழீஇ யினகனி பொறாவளை யிபங்கண்மேல், விழீஇயினவினை பொறாவிளங்க முல்லையே." எ-ம். வரும். ஐயீற்றேவற் பகுதிக் களபெடை கூட்டி னிறந் தகாலவினையெச்சமாம். (உ-ம்.) வளைஇ, எ-ம். வரும். இதற்கு அகரங் கூட்டினக்காலப் பெயரெச்சமாம். (உ-ம்.) வளைத்த - வளைஇய, எனவரும். துவ்வாமைவந்தக்கடை, நல்வினைதானுற்ற வழியுதவும், நல்வினைதானுற்ற விடத்துதவும், இவற்றுள் கடை-வழி-இடத்து-விகுதி யிறந்தகால வினை யெச்சமாயின. - நன்னூல். - "செய்துசெய்பு செய்யாச் செய்யூச், செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர், வான்பான் பாக்கின வினை யெச்சம்பிற, வைந்தொன்றாறு முக்காலமு முறைதரும்." - தொல்காப்பியம். - "பின் முன்கால் கடைவழி யிடத்தென்னு, மன்னமரபிற் காலங் கண்ணிய, வென்னகிளவியு மவற்றியல்பினவே." எ-று. (3) | 120. | எனவொழித் தொழிந்த விறப்பெச் சத்தும் வான்பான் பாக்கென வருமூன் றற்கு மேற்கு மொருகருத்தா விரண்டும் பிறவே. | | (இ-து.) வினையெச்ச விகற்பங்களா மாறுணர்த்துதும். வினையெச்ச மெல்லாந் தனியேவாரா; மற்றொருவினையைத் தொடர்ந்துமுடியும்; எஞ்சிய வினையின் கருத்தா மவையேதொடரும்; முற்றுவினையின் கருத்தாவும் ஒன்றாகவும் பிறிதாகவும் வரும். இ, உ, ஊ, பு, ஆ, விகுதி யிறந்தகாலவினை யெச்சமும், வான், பான், பாக்கு, விகுதி யெதிர்கால வினையெச்சமுந் தொடருமுற்று வினையோடொரு கருத்தாவைக் கொள்ளுமல்லா தெஞ்சிய வினைக்கொரு கருத்தாவும், முற்றுவினைக்குப் பிறிதொரு கருத்தாவுங் கொள்ளின் வழுவாம். (உ-ம்.) நீயாடி, அவன்பாடினான், எ-து. ஆடற்குக் கருத்தாநீயே, பாடற்குக்கருத்தா வவனே, ஆகையால்வழுவாம். அவ்வழுவின்றி நீயாட அவன் பாடினா னென்க. உவ்வொடு கூட்டிய, என, விகுதி யிறந்தகால வெச்சமும், அ, விகுதி வினையெச்சமும், இல், இன், இய, இயர், விகுதி யெதிர்கால வெச்சமுந் தாமே தொடருமுற்று வினையோ டொரு கருத்தாவையும் பல கருத்தாவையு நோக்கிவரும். (உ-ம்.) பசித்தெனப் புலி புன்மேயாது - தன்வினை முதல்வினை; மாரிபெய்தென முல்லைமலர்ந்தது - பிறவினை முதல்வினை; மோப்பவெடுத்தேன் - தன்வினை முதல்வினை; மோப்பக்குழையு மனிச்சம் - பிறவினை முதல்வினை; உண்ணினுவக்கும் - தன்வினை முதல்வினை; உண்ணிற் பசிதீரும் - பிறவினை முதல்வினை; நீரிவைகாணிய வம்மின் - தன்வினை முதல்வினை; அவர் காணிய வம்மின் - பிறவினை முதல் வினை; நாம்வாழிய ரெய்தினம் - தன்வினை முதல்வினை; நாம் வாழியரிரும் பொருளளித்தனம் - பிறவினை முதல்வினை; முறையே சொன்ன வெச்சங்கள் முற்றுவினையொடு ஒரு கருத்தாவும் இருகருத்தாவும்பற்றி முடிந்தவாறு காண்க. அன்றியும், எஞ்சியவினைக்கு முற்றுவினைக்குங் கருத்தா |
|
|