வழுவெனப்படும். இவை யிடமுதன் மரபீறாக வேழாம். அவற் றுள்ளே மூவிடந் தம்முண்மயங்குவ திடவழுவாம். (உ-ம்.) நான்வந்தாய், நீவந்தான், அவன் வந்தேன், யாம்வந்தீர், நீங்கள் வந்தேம், அவர்கள் வந்தீர், எனவரும். ஐம்பாலுந் தம்முண்மயங்குவது பால்வழுவாம். (உ-ம்.) அவன் வந்தாள், அவள் வந்தார், அவர் வந்தான், அதுவந்தன, அவைவந்தது, எனவரும். இருதிணை தம்முண்மயங்குவது திணைவழுவாம். (உ-ம்.) அவன் வந்தது, அதுவந்தான், அவர் வந்தன, அவை வந்தார், எனவரும். முக்காலமுந் தம்முண்மயங்குவது காலவழுவாம். (உ-ம்.) பண்டுவருவான், நாளைவந்தான், நெருநல் வராநின்றான், எனவரும். விடை தம்முண்மயங்குவது விடைவழுவாம். (உ-ம்.) திருக்காவலூர்க்கு வழியெது வெண்பார்க்கு மருக்காவலர்ந்ததுகாண், எனவரும். வினா தம்முண் மயங்குவது வினாவழுவாம். (உ-ம்.) கறக்கின்றவெருமை பாலோசினையோ, எனவரும். 82-ஞ் சூத்திரத்திற் சொல்லிக் காட்டிய மரபின் சொல்லெல்லாந் தம்முன்மயங்குவது மரபுவழுவாம். (உ-ம்.) யானைமேய்ப்பானை யிடையன் எ-ம். மாடுமேய்ப்பானைப் பாகன், எ-ம். வரும். - நன்னூல் - "திணையேபாலிடம் பொழுது வினாவிறை, மரபாமேழு மயங்கினாம் வழுவே." எ-து. மேற்கோள். எ-று. (5) | 128. | ஐயந் திணைபா லணையும் பொதுவே. | | (இ-ள்.) சிலவழுக்காத்தலா மாறுணர்த்துதும். திணைமே லையந்தோ ன்றினும் பான்மேலையந்தோன்றினும் அவற்றுட்பொது மொழிகொண்டு முடிக்கவும். (உ-ம்.) குற்றியோமகனோ வவ்விடத்தே தோன்றுகின்றவுரு, எனத்திணையையத்திலே, உரு, என்கிற பொதுச்சொல்லாலும்; ஆண்மக னோபெண்மகளோ வங்ஙனந் தோன்றுகின்றவர், என வுயர்திணைப்பாலையத்திலே, தோன்றுகின்றவர், என்கிற பொதுச்சொல்லாலும்; ஒன்றோ பலவோவிச் செய்புக்க பெற்றம், என வஃறிணைப்பா லையத்திலே, பெற்றம், என்கிற பொதுச்சொல்லாலுஞ் சொல்லுக. - நன்னூல். - "ஐயந்திணைபா லவ்வப் பொதுவினு, மெய்தெரி பொருண்மே லன்மையும் விளம்புப." எ-து. மேற்கோள். எ-று. (6) | 129. | சிறப்பணி நடையாற் றிணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணுத னெறியே. | | (இ-ள்.) இதுவுமது. இகழப்படும் வழுவின்றி யலங்காரவகையான் மரபல்லவற்றையு மொரோவிடத் துரைப்பது மிருதிணை தம்முளுஞ் சி னைமுதற் றம்முளு மயங்கிவருவது சிறப்பாம். (உ-ம்.) நம்மரசனாகிய சிங்கத்திற்குப் பகைவர் கூட்டமாகிய யானைக ளஞ்சி யோடின, உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று. அவ்வரசனுக்குத் தம்பியரிருவரு மிரண்டு தோள்கள், உயர்திணைமுதல் உயர்திணைச் சினையோடு மயங்கிற்று. |
|
|