முகமாகியமதி, உயர்திணைச்சினை அஃறிணை முதலோடு மயங்கிற்று. கல்வி மங்கையை நல்லோர் விரும்புவார், அஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று. இவை உருவகவணி. மயில்போலு மங்கை, அஃறிணை உயர்திணையோடுமயங்கிற்று. கயல்போலுங்கண், உயர்திணைச்சினை அஃறிணை முதலோடுமயங்கிற்று. தளிர்போலுமேனி, உயர்திணை முதல் அஃறிணைச் சினையோடு மயங்கிற்று. இவை உவமையணி. - தேம்பாவணி. - "குரவநீள் வேலிகோலுங் குடங்கையுட் டுஞ்சித்தன்னைக், கரவநீள் பசும்பூநெற்றிக்கரு ம்புகணிறுவியூக்கி, விரவிநீடலையின் வாழை விடுங்கனி நக்கித்தீங்கான், பரவநீள்பலபூங்காவும் படுநெறிப்போயினாரே." இதனுள் பலசினைப்பெயரும் பலதொழிற் பெயரும் பலகுணப்பெயருமுரிய தற்பொருட்கன்றிப்பிறழ்ந்து பிறபொருட்குஞ் சிறப்போடுரைத்தவாறு காண்க. பிறவென்றமிகையால் இவன் சரசுவதிக் கொப்பானவன், எனப் பான்மயங்கிக்கூறுதலும்; அரசு, வேந்து, என உயர்திணை அஃறிணையாகக் கூறுதலும், அலவன், நகுலன், கலுழன், சுணங்கன், என அஃறிணையை உயர்திணையாகக்கூறுதலுங் கொள்க. - நன்னூல். - "உருவக வுவமையிற்றிணை சினைமுதல்கள், பிறழ்தலும் பிறவும் பேணினர்கொளலே." எ-து. மேற்கோள். எ-று. (7)நான்காவது:-வினைக்குறிப்பு.-முற்றிற்று. மூன்றாமோத்துவினைச்சொல்லியல். - முற்றிற்று. | நான்காமோத்துஇடைச்சொல்லியல். Part IV. - Particles. | 130. | இடைச்சொற் றனிநிலை யின்றி முன்பின் வினைபெயர் சேர்ந்து வேற்றுமை சாரியை வினையொப் புருபுகளும் விளங்குதம் பொருளவு மிசைநிறைப் பனவு மசைநிறைப் பனவுங் குறிப்பு மெனவெண் கூற்றவை யென்ப. | | (இ-ள்.) மேலே வகுத்துக்கூறிய நால்வகைச் சொற்களு ளிவ்வோத்தின்கண்ணே யிடைச்சொல்லியல்பினை விளக்குதும். இடையெனப்படுவன வேற்றுமை யுருபுகளும், வினையுருபுகளும் சாரியையுருபுகளும், உவமையுருபுகளும், தத்தம்பொருளைக் காட்டுவனவும், இசைநிறைப்பனவும், அசைநிறைப்பனவும், குறிப்பின்வருவனவும், என்றிவ்வெண்வகையவாகித் தாமாகத் தனியேவாராமற் பெயர்க்கும் வினைக்கும்பின்னுமுன்னுமாக ஓரிடத் தொன்றாயினும் பலவாயினும் வந்து நிற்பதுஇடைச்சொல் லெனப்படும். (உ-ம்.) ஐ, ஆல், என வேற்றுமை யுருபும், அன், ஆன், அள், ஆள், |
|
|