9 | இரண்டாவதெழுத்தின்வகுப்பு | ஒலி வடிவு = செவிப்புலனறிதல். வரி வடிவு = கட்புல னறிதல். எ-று. (8) | 12. | நீட்டல் சுழித்தல் குறின்மெய்க் கிருபுள்ளி. | | (இ-ள்.) எழுத்து வடிவ மாமாறுணர்த்துதும். மெய்யின் வடிவும், உயிர் மெய்யின் வடிவும், பலமுறை வேறுபடாமையானும், எகரம் ஏகாரம், ஒகரம், ஓகாரம், எப்போதும் ஒருவடிவாகையானும், மயக்க நீப்பது வேண்டி மேற்புள்ளி கொடுத்தார் புலவர். ஆகையில் குற்றெழுத்தின் மேனீண்ட புள்ளியும், ஒற்றெழுத்தின் மேற்சுழித்த புள்ளியும், வருமென்றுணர்க. (உ-ம்) எரி-எரி, ஒதி-ஒதி, மணமகள்-மண்மகள், தாம்-தாம், கணமணி- கண்மணி, எ-ம். வரும். சூத்திரம். "மெய்யினியற்கைப் புள்ளியொடு நிலைய, லெகரவொகரத் தியற்கையுமற்றே." எ-ம். கூறினார், எ-று. (9) | 13. | ஆய்தங் குறில் வலிக்காகு நடுவே யஃதீற்று ல ளத்திருந்துளி யஃகும். | | (இ-ள்.) குறுகாதவாய்தம் குறுகியவாய்தமாமாறுணர்த்துதும். ஆய்தங்குற்றெழுத்திற்கும், உயிரொடுபுணர்ந்த ஆறுவல்லெழுத்திற்கும், நடுவே வரப்பெறும். இதனுருவோ வெனில் முப்புள்ளி வடிவு; இது மெய்யெழுத்தின் றன்மைத்தாவதன்றி அதன்மே லுயிரேறப்பெறாதெனக்கொள்க. (உ-ம்.) எஃகு, கஃசு, கஃடு, பஃது, கஃபு, கஃறு என வரும். இவ்வாறுடன், அஃகடிய எனப் புணர்ச்சி விகாரத்தால் வருமாய்தமும், அஃகான் எனச்செய்யுள் விகாரத்தால் வருமாய்தமுங்கூடி எட்டாதல்காண்க. அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று, ஆய்தம் எனினு மொக்கும். இவ்வாறு வருதல் குறுகாதவாய்தம். அன்றியும் ஈற்று லகார ளகாரங்கள் தவ்வொடு புணருங்கால் திரியும்; திரிந்தவழியின் ஆய்தம் வரும்; வரினுங்குறுகி ஆய்தக் குறுக்கமாகும். (உ-ம்) கல் + தீது = கஃறீது, முள் + தீது = முஃடீது, எ-ம். வரும். ஆய்தமென்ற திடுகுறிப்பெயர். முதலெழுத்து முப்பதினொன்றல்லாது வேறாய் நிற்றலானும், உயிர்போலத் தனித்தொலியாதுமாய் மெய்போல உயிரேறப் பெறாதுமாய் முதலெழுத்தாந் தன்மை எய்தாமையானும், இரு மருங்கும் வருமெழுத்தைச் சார்ந் தொலித்தலானுஞ் சார் பெழுத்தி னொன்றாயின, எ-று. (10) | 14. | யம்முதலிய்யா மிருகுறளுக்கெடி லஃகுமற்றா மசைச்சொன்மியாவே. | | (இ-ள்.) குற்றிய லிகரமாமாறுணர்த்துதும். நிலைமொழிக் குற்றியலுகரத்தின் முன்னே வருமொழி முதற்கண் யகரம் புணர்ந்து கெடுமிகரமும், முன்னிலையசைச் சொல்லாகிய மியா வெனு மொழியில் வந்த இகரமும், |
|
|