பழியோவருந்துதும்யாமே, எ-து. ஒகாரம் பொருள்குறியாது நிற்றலின் அசைநிலை. கொளலோ கொண்டான், எ-து. ஓகாரம் கொண்டுய்யப் போயினானல்லன் என ஒரு சொல்லொழிவு படவந்தமையால் ஒழியிசை. யானோசொன்னேன், எ-து. ஓகாரம் யான்சொல்லவில்லை எனப்பொருடந்து நிற்றலின் எதிர்மறை. அவனோ வல்லவனோ, எ-து. ஓகாரம். அவனோ வல்லவனோ என வினாவிநிற்றலின் வினா. நன்றோவன்று தீதோவன்று, எ-து. ஓகாரம் அத்தன்மையில்லாமை தெளிந்தவழிநிற்றலின் தெளிநிலை. நைதலின்ற நல்லறஞ்செய்கின்றாலோ வுயிருய்யும், எ-து. ஓகாரம் கழிந்ததற்கிரங்கி நிற்றலின் கழிவு. ஓ ஓ பெரியன், எ-து. ஓகாரம் பெருமை மிகுதியை விளக்கிநிற்றலின் சிறப்பு. அன்றியும் குற்றியோ மகனோ, எ-து. ஓகாரம் ஐயப்பொருளைத் தந்துநிற்றலின் ஐயம். - நன்னூல். - "ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை, கழிவசைநிலைபிரிப்பென வெட்டோவே." - தொல்காப்பியம். - "பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை, தெரிநிலைக்கிளவி சிறப்பொடுதொகைஇ, யிருமூன் றென்ப வோகா ரம்மே." (எ-று.) (3) | 133. | எனவென்ப துவமை யெண்குணம் வினைபெய ரிசைக்குறிப் பியலு மென்று மினைத்தே. | | (இ-ள்.) என வென்றீரிடைச் சொல்லா மாறுணர்த்துதும், இவையே உவமையும், எண்ணும், குணமும், வினையும், பெயரும், இசையும், குறிப்பும், எனவேழிடத்தும் வரப்பெறும். (உ-ம்.) பூங்கொடி வீழ்ந்தென வீழ்ந்தாள், கொடும்புலி பாய்ந்தென பாய்ந்தான், என வினையோடியைந்து வந்தவுவமை, கூற்றெனக் கொடுங்கண், காரெனயார்க்கும் பொழிந்தான், எனப்பெயரோடியைந்து வந்தவுவமை. ஒரோவிடத்து, என்று, உவமையுருபாகவரும். அன்றியும், கடலெனக் காலெனக்கடுங்கட் கூற்றென, உருமெனவூழித் தீயென, ஒன்றென விரண்டென மூன்றென; கல்லென்று முள்ளென்று; என, என்று, எண்ணோடியைந்தன. வெள்ளென வெளிர்த்தது, வெள்ளென்று வெளிர்த்தது; என, என்று, பண்போடியைந்தன. கொள்ளெனக் கொண்டான், கொள்ளென்று கொண்டான்; என, என்று, வினையோடியைந்தன. ஊரெனப்படுவதுறையூர், ஊரென்று சொல்லப்படுவதுறையூர்; என, என்று, பெயரொடியைந்தன. ஒல்லென வொலித்தது, ஒல்லென்றொலித்தது, என, என்று, இசையோடியைந்தன. விண்ணென விசைத்தது, விண்ணென்றிசைத்தது; என, என்று, குறிப்போடியைந்தன. பிறவுமன்ன. - தொல்காப்பியம். - "வினையே குறிப்பே யிசையே பண்பே, யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங், கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி. என்றென் கிளவியு மதனோ ரற்றே." இவை மேற்கோள். எ-று. (4) | 134. | உம்மையே யெதிர்மறை யெச்சமுற் றளவை சிறப்பைய மாக்கந் தெளிவென வெட்டே. | |
|
|