(இ-ள்.) உம்மையிடைச் சொல்லா மாறுணர்த்துதும். இஃது எதிர்ம றையும், பிறவினமும், முற்றும், அளவையும், சிறப்பும், ஐயமும், ஆக்கமும், தெளிவும், என எண்பொருளைக் காட்டவரப்பெறும். (உ-ம்.) வருதலுந்தீது, எ-து. எதிர்மறையாக வாராமை தீதென்பதற்கு முரித்தென்றமையால் இதுவே எதிர்மறையும்மை. சாத்தனும் வந்தான், எ-து. பிறரும் வந்தது விளக்கலின் இறந்ததுதழீஇய வெச்சவும்மை. இனிக்கொற்றனும் வருவானென்னும் பொருளைத்தரின் எதிரதுதழீஇய வெச்சவும்மை. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார், எ-து. மூவரன்றி வேறில்லை யென விளக்கலின் முற்றும்மை. ஒன்று மிரண்டும், பொன்னு மணியும், எ-து. எண்ணுதற் கண் வருதலின் அளவும்மை. பலமுங்கஃசும், எ-து. நிறையளவும்மை. ஒருகோலும் அரைகோலும், எ-து. கோலளவும்மை. ஆழாக்கும் உழக்கும் உரியும் நாழியும், எ-து. அளவினளவையும்மை. குறவருமருளுங் குன்றம், எ-து. குன்றத்திற் குறவர் மயங்காது திரியுமுயர்வைச் சிறப்பித்தது உயர்வுச் சிறப்பும்மை. பூனையும் புலாற்றின்னாது, எ-து. பூனையிடத்திற் புலாற்றின்னு மிழிவைச்சிறப்பித்தது இழிவுச்சிறப்பும்மை. பத்து மெட்டும், எ-து. ஒன்றிற்றேறாமையின் ஐயவும்மை. புலியினுங் கொடியன், கடலினும் பெரிது, எ-து. ஆக்கவும்மை. நன்றுமன்று தீதுமன்று, ஆணுமன்று பெண்ணுமன்று, எ-து. இன்னதெனத் தெளிந்தவிடத்து தெளிவும்மை. எச்சவும்மை இருவகை, சிறப்பும்மை இருவகை, அளவும்மை நால்வகை. பிறவுமன்ன, -தொல்காப்பியம். - "எச்சஞ் சிறப்பே யைய மெதிர்மறை, முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென், றப்பா லெட்டே யும்மைச் சொல்லே." எ-து. மேற்கோள். எ-று. (5) | 135. | வரைப்படு மெண்ணும் வையகத் தில்லவும் வினைப்படி னும்மை வேண்டுஞ் செவ்வெண் ணீற்றின் வேண்டு மெச்ச வும்மையே. | | (இ-ள்.) உம்மையிடச்சொற் சிறப்புவிதியா மாறுணர்த்துதும். இத் துணையென்று வரையறுத்துணரப்பட்ட பொருள்களும், உலகில்லாப் பொருள்களும், வினையொடு கூட்டிச் சொல்லுங்கால் உம்மை கொடுத்துச் சொல்லல் வேண்டும். (உ-ம்.) கண்ணிரண்டுஞ் சிவந்தன, காலமூன் றாங்கண்டான், எ-ம். என்னங்கைக்கு மயிரில்லை, முயற்கோடு மாமைமயி ருங்கோழிமுலையும் பண்டுமில்லை, இக்கழுதைக்குங் கோடில்லை, எ-ம். இவை யும்மையின்றிவரின் இரண்டன்றி வேறு கண்ணுள, எ-ம். மற்றோ ரங்கைக்கு மயிருள, எ-ம். முயற்கோடும் ஆமைமயிரும் கோழிமுலையும் இன்றுள, எ-ம். மற்றைக்கழுதைக்குக்கோடுள, எ-ம். வரும். பிறவுமன்ன. ஆயினும் இத்துணைத்தென்று எண்ணப்பட்ட பொருளின்பெயர் வினைப்படாதுவரின் உம்மை கொடுத்தலுங் கொடாமையுமாம். (உ-ம்.) இவையிரண்டும் பசு, இவை மூன்றுங்கன்று, எ-ம். அறமிரண்டு, குற்றமூன்று, எ-ம். மீளவும், |
|
|