எண்காட்டு முருபின்றிச் செவ்வெண்ணாகப் பல வற்றைச் சொல்லின் ஈற்றினிடத்து உம்மைக்கொடுக்கவுமாம். (உ-ம்.) அடகு புலால் பாகு பாளிதமு முண்ணான், கடல்போலுங் கல்லியவன், எ-ம். அடகுபுலால் பாகுபாளிதமு முண்ணா னென்பதாகா. இஃது எச்சவும்மை யென்றதனா லடகுமுதலியவற்றையு முண்ணனென்பது மாயிற்று. பிறவுமன்ன. - நன்னூல். - "செவ்வெண் ணீற்றதா மெச்ச வும்மை." எ-து. மேற்கோள். எ-று. (6) | 136. | எண்வகை யெட்டனுள் ஏசெவ்வெண் ணென்றா எனாநான்குந் தொகைபெறு மெனவொடு வும்மை நான்குந் தொகாமை நடக்கவும் பெறுமே யென்றென வொடுமூன்று மெஞ்சிடத் தனவுமாம். | | (இ-ள்.) எண்ணிற்குரிய விடைச்சொல்லா மாறுணர்த்துதும். எண்ணின்வகை எட்டுளவெனக் கொள்க. அவையே உருபில் செவ்வெண்ணும், எ, என்றா, எனா, என்று, என, ஒடு, உம், என்றிவ்வேழுருபு பெற்ற வெண்ணுமாக எட்டெனப்படும். இவற்றுள் பெயர்க்கண் வருஞ் செவ் வெண்ணும், ஏகாரவெண்ணும், என்றா வெண்ணும், எனாவெண்ணும், ஆகியநான்கும் ஈற்றின்கண்ணே தொகைபெற்று நடக்கும். (உ-ம்.) சாத்தன், கொற்றன், இருவரும்வந்தார், எ-ம். சாத்தனே, கொற்றனே, தேவனே, மூவரும் வந்தார், எ-ம். நீயென்றா, அவனென்றா, இருவரும்போமின், எ-ம். நானெனா, நீயெனா, அவனெனா, மூவரும் வந்தனம், எ-ம். முறையேநான்குந் தொகைபெற்றவாறு காண்க. என்று, என, ஒடு, உம், என்றிந்நான்குந் தொகைபெற்று நடக்கவுந் தொகைபெறாது நடக்கவுமாம். (உ-ம்.) சாத்தனென்று, கொற்றனென்று, சொன்னவர் வந்திலர்; எ-ம். நிலனென், நீரெனவேண்டும், எ-ம். பரியொடு, கரியொடு, தேரொடுதானை பொழிந்தன, எ-ம். நிலனுநீருந்தீயும் நல்ல, எ-ம். முறையேநான்குந்தொ கைபெறாது வந்தவாறுகாண்க. மீளவும், நிலனும் நீரும் இரண்டும் வேண்டும், எ-ம். பிறவுந்தொகை பெற்றுவரவுமாம். அன்றியும் என்று, என, ஒடு, என்றிம்மூன்றிடைச்சொல் எண்ணின்கண் ஓரிடத்தே நிற்பினும் எண்ணப்படும் பொருள்கடோறும் பிரிந்து செல்லுமென்றுணர்க. (உ-ம்.) குறள். "வினைபகை யென்றிரண்டி னெச்சநினையுங்காற், றீயெச்சம்போ லத்தெறும்." எ-ம். "பகை பாவ மச்சம்பழி யெனநான்கு, மிகவாவாமில் லிறப்பான் கண்," எ-ம். "பொருள் கருவி காலம் வினையிட னோடைந்து, மிருடீர வெண்ணிச்செயல்." எ-ம். இவற்றை விரித்துரைக்கில் வினையென்று, பகையென்று, எ-ம். பகையென, பாவமென, அச்சமென, பழியென, எ-ம். பொருளோடு, கருவியோடு, காலமோடு, வினையோடு, இடனோடு, எ-ம். முறையே மூன்று மேனை யிடத்தும் பிரிந்து சென்ற வாறு காண்க. - நன்னூல். - "பெயர்ச் செவ்வெண்ணே யென்றா வெனாவெண், |
|
|