136தண்டியலங்காரம்

புதைத்தல் - மறைத்தல். மால்கரி - பெரிய யானை. புதைத்தாள் - மறைத்துச் சொன்னாள்.

வி-ரை: இப்பாடற்கண் சோழனைக்கண்ட ஆசையால் உண்டாகிய நடுக்கத்தையும், மயிர் சிலிர்த்தலையும், இளவாடையால் நேர்ந்ததெனப் பிறிதின் மறுத்துரையாடி யிருத்தலின், இது இலேசவணி யாயிற்று. (38)

அதன் வகை

65. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
அவையும் அன்னதென்(று ) அறைகுநர் உளரே.

எ-ன், அவ்விலேசத்தின் பாற்படுத்துப் பிறர் வேண்டுவன சில அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ- ள் : ஒன்றனைப் புகழ்ந்தாற்போலப் பழித்து உரைத்தலும், பழித்தாற் போலப் புகழ்ந்து உரைத்தலும் என்னும் இரண்டும் அவ்விலேசத்தின் பாற்படும் என்று உரைப்பாரும் உளர் ஒருசார் தொல்லாசிரியர் எ- று.

அவற்றுள்,


1. புகழ்வதுபோலப் பழித்தல்

எ- டு : 'மேய கலவி விளைபொழுது நம்மெல்லென்
சாயல் தளராமல் தாங்குமால் - சேயிழாய் !
போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யாம்விரும்பித்
தார்வேட்ட தோள்விடலை தான் '

இ- ள் : தோழீ ! கேட்பாயாக ! எம்மிற் பொருந்திய கலவி நிகழும்போது அக்கலவிக்கண் நமது மென்மை குன்றாதபடி பரிகரித் தொழுகுவான் ; எப்பொழுதும் போர்த்தொழிலை விரும்பிய மேலாய புகழையுடையவன், யாம் முற்காலத்துக் காதலித்து மாலையிட்ட தோளையுடைய தலைவன் எ-று.

அக்காலத்து அறிவு அழியாமையால், பழிப்பாயிற்று.

வி-ரை: ஒன்றனையே புகழ்வது போலப் பழிப்பது இதன் இலக்கணமாகும்.

இப்பாடற்கண் தலைவி, புணருங்காலத்துத் தன் தலைவன் தன் மென்மை கெடாமல் பாதுகாக்கின்றான் எனப் புகழ்வது போலக்கூறி, அக்காலத்துத் தன் மென்மை கெடத் தலைவன் கூடவேண்டியிருக்க, அங்ஙனம் கூடும் தன்மை அறியாதிருக்கின்றான் எனப் பழித்துக்கூறலின், இது புகழ்வது போலப் பழித்தலாயிற்று.

2. பழிப்பதுபோலப் புகழ்தல்

எ- டு : ' ஆடல் மயிலியலி அன்பன் அணியாகம்
கூடுங்கால் மெல்லென் குறிப்பறியான் - ஊடல்
இளிவந்த செய்கை இரவாளன் யார்க்கும்
விளிவந்த வேட்கை யிலன் '

(இ-ள்) ஆடாநின்ற மயில்போலுஞ் சாயலினை யுடையாய் ! நம்மீது அன்பு வைத்த தலைவனுடைய அலங்கரித்த மார்பகத்தை யாம் கூடுங்கால், நம் மெல்லென்ற நலம் பாராட்ட அறியான் ஆதலானும், ஊடற்கண் தனக்குத் தகாதன செய்து இரக்கும் இரவாளன் ஆதலானும், யாவர்க்கும்