| 
  
    | பாட்டியல்
- நூற்பா எண் 176 | 
     
371 |        
 கல்விநிறை அடக்கமும், வாய்மையும், நடுநின்று
சொல்லும் நன்மையும்,உடையோர் குழீஇ, மாட்டாதார்
கவி அரங்கேற்று, அவர்கள் குற்றத்தை
 நினையாது,குணம்மேற்கொண்டு,
அவர்களை வல்லமை உடையராக்கி
 வினவிக் கேட்போர்
உறையும் அவை நிறையவையாம் என்றவாறு.
 
  எனவே, இதன் எதிர்மறை முகத்தான் குறைந்த கல்வியும்
நிறைந்த
 அழுக்காறும் உடையோர் அவை குறையவையும்
தீயவையும் என்பது
 பெற்றாம்.
 
 
(176) 
ஒத்த
நூற்பாக்கள்
 
 
 
நல்லவை
:
 
 
 
   
‘புகழும் தருமநெறி நின்றோர் பொய்காமம் 
    
இகழும் சினம்செற்றம் இல்லோர் - நிகழ்கலைகள் 
    
எல்லாம் உணர்ந்தோர் இருந்த இடமன்றோ 
    
நல்லாய் அவைக்கு நலம்.’    
                        
 -
வெண். பாட். பொ. 9 
  
 நிறையவை
:
 
 
 
   
‘நலன்அடக்கம் செம்மை நடுநிலை ஞானம் 
    
குலனென் றிவையுடையோர் கோதில் -
புலனில்லோர் 
    
சென்று மொழிந்தனவும் கேட்போர் செறிந்தவிடம் 
    
அன்றோ நிறைந்த அவை.’                          
 
- வெண். பாட். பொ. 10 
  
    (நிறையவையோர் குற்றத்தைவிடுத்துக் குணமே
கொள்வர் என்பதாம்.) 
  
 தீய
அவை:
 
 
 
   
‘அவையின் திறம்அறியார் ஆய்ந்தமைந்து
சொல்லார் 
    
நவையின்றித் தாம்உரையார் நாணார் - சுவை
உணரார் 
    
ஆய கலைதெரியார் அஞ்சார் அவர்அன்றோ 
    
தீய அவையோர் செருக்கு.’
     
 - வெண். பாட். பொ. 11 |