| 
  
    | பாட்டியல்
- நூற்பா எண் 177 | 
    373 |   
    
முதல் ஒரு மூன்றும்நன் முகூர்த்த மாக
 
   
அகலக் கவிபுனைந்து இன்புறல் கடனே.
 
 
 
இது
நிறுத்தமுறையானே பிற எனப்பட்ட ஓரை ஆமாறு கூறுகின்றது.
 
    
இ - ள்: அகரமும் இகரமும் உகரமும் எகரமும் ஒகரமும்
தத்தம் இனஎழுத்துக்களோடு சார்த்தி, ஐகாரம்
இகரத்தோடும் ஒளகாரம் உகரத்தோடும்
 சார்த்தி
ஐவகை ஆக்கி, ஆதித்தன் உதயந்தொடங்கி நன்பகலின்
 இன்பமுறும் நாழிகை ஓர் ஆறு ஆறாக வகுத்தவற்றுள் முன்நின்ற
ஓரை
 மூன்றில் அகலக் கவியைப் புனைந்து இன்பமுறல்
முறைமை என்றவாறு.
 
 
    
ஏனை இரண்டு ஓரையும் ஆகா என்பதாம்.
      
 (177) 
 
 
விளக்கம்
 
நேரம்
:
   
    அ, ஆ -உதயம் தொடங்கி முதல் 6 நாழிகை-1-3 
நாழிகை ஏற்றன 
      
  
  
    | 
    இ,
ஈ, ஐ  | 
    - | 
    7 முதல் 12 நாழிகை முடிய  7-9  | 
    ’’ |  
    | 
    உ,
ஊ, ஒ | 
    - | 
    13 முதல் 18 நாழிகை
முடிய  13-15 
     | 
    ’’ |  
    | 
    எ,
ஏ  | 
    - | 
    19 முதல்
24 நாழிகை முடிய  19-21  | 
    ’’ |  
    | 
    ஒ, ஓ 
     | 
    - | 
    5 முதல் 30 நாழிகை முடிய  25-27 
     | 
    ’’ |  
  
    
ஒவ்வொரு பகுப்பிற்கும் உரிய அவ்வாறு நாழிகைகளில்
முதல் மும்மூன்று நாழிகைகளே ஏற்றனவாம். 
 
 
ஒத்த
நூற்பா
 
 
 
    
‘கடனாம் அகர ஆகாரம் கதிரோன் 
    
உடனாய் எழுங்கடிகை ஓராறு - இடனாகி 
    
ஏனை உயிர்க்கூறும் இவ்வகையால் வந்துதித்தால் 
    
ஆனமுதல் மூன்றும் அழகு.’                         
 
- வெண். பாட். பொ. 26 
                                                 
    
177 |