பக்கம் எண் :

New Page 1

38                     

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

இம்மூன்று நூற்பாக்களும் சில திரிபுகளுடன் இணைந்து ஒன்றாகக்
கூறப்பட்டுள்ளன.

 

131.  ‘அவற்றுள்,

     சூத்திரந் தானே

     யாடி நிழலின் அறியத் தோன்றி

     நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க

     யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே.’

                                       - தொல். பொ. 481

 

133.  ‘உரைஎடுத்து அதன்முன் யாப்பினும் சூத்திரம்

     புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்

     விளம்பலும் விலக்கலும் உடையோர் வகையொடு

     புரைதப நாடிப் புணர்க்கவும் படுமே.’

                                      - தொல். பொ. 654

 

     ‘மேற்கிளந்து எடுத்த யாப்பினுள் பொருளொடு

     சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச்

     சொல்லுங் காலை உரைஅகத்து அடக்கி

     நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகித்

     துளக்க லாகாத் துணைமை எய்தி

     அளக்க லாகா அரும்பொருட் டாகிப்

     பல்வகை யானும் பயன்தெரிபு உடையது

     சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர்.’

                                      - தொல். பொ. 655

 

     இவ்விரு நூற்பாக்களும் சிற்சில திரிபுகளோடு இணைத்து ஒன்றாகக்
கூறப்பட்டுள்ளன.

 

134.  ‘நேர்இன மணியை நிரல்பட வைத்தாங்கு

     ஓர்இனப் பொருளை ஒருவழி வைப்பது

     ஓத்துஎன மொழிப உயர்மொழிப் புலவர்.’

                                      - தொல். பொ. 482