பக்கம் எண் :

149

குற்றியல் உகரத்து இறுதியும் உளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே’           தொல். 152

என்றே குறிப்பிட்டுள்ளமை காண்க.

காட்டு+யாத்தான் என்பன-ஏழன் தொகையாய்க் காட்டியாத்தான் எனக் குற்றியலுகரம் கெடக் குற்றியலிகரம் பெற்று அமைந்தன. இனிக் காட்டி என்ற வினையெச்சம் யாத்தான் என்ற வினைகொண்டு முடிந்து வினையெச்சத் தொடர் ஆகிய வழியும், காட்டியாத்தான் என்றே முடியும்.

இவ்வினையெச்சத் தொடர்க்கண் காட்டி என்பதன் இகரம் முற்றியலிகரம். சென்ற தொடரில் உள்ள காட்டி என்பது காட்டு என்பதன் திரிபாய்க் காட்டின்கண் என்று பொருள்பட்டுக் குற்றியலிகரம் ஆயினவாறும், இவ்வினையெச்சத் தொடர்க்கண் உள்ள காட்டி என்பது முற்றியலிகரமாய்க் காண்பித்து என்று பொருள்படுமாறும் காண்க. எனவே, குற்றியலுகரங் குற்றியலிகரங்களால் பொருள் வேறுபாடு ஏற்படுவதும் காண்க.

மேலும் யாப்பின்கண் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் சீரும் தளையும் சிதைய வருவழி அலகுபெறா இவ்வாசிரியர், தாம் செய்யுளியலையும் உட்கொண்டு சார்பெழுத்துக்களை அமைத்துக்கொண்டதற்கு ஏற்ப விளக்கம் கூறுவதும் காண்க.

‘நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்தே’           தொல்.36

என்ற நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், ‘நெட்டெழுத்தினதுபின், தொடர் மொழியினது ஈறு என, நிலத்தது அகலம் போல ஒன்றியல் கிழமைப்பட்டு நின்றது, அம்மொழியில் தீர்ந்து குற்றுகரம் நில்லாமையின்’-எனவும், ‘தருக்கு, அணுக்கு என்பன’ வினைக்