பக்கம் எண் :

148

இறுதி எனப்படல் வேண்டும், நன்னூல் விருத்தியில் இவை போல்வன நெட்டொற்று இறுதியாயும், இறும்பூது போல்வன நெடில் இறுதியாயும் அடங்குமேனும், போவது வருவது என்பது போல்வன இப்பகுப்புள் அடங்கா என்பது விளக்கப்பட்டுள்ளது.

நெடில் பிரிக்கப்பட்டது, தனிநெடில் என்றற்கு குறில் நெடில் போல்வன உயிர்த்தொடருள் அடங்கும் என்பது.

தொடர்மொழி என்பன இரண்டற்கு. மேற்பட்ட எழுத்துக்களை உடைய சொற்களாம். எனவே குற்றியிர் ஒன்றுமே தொடர்ந்து அமையும் அது இது முதலிய சொற்களில் உள்ள உகரம் குற்றியலுகரம் ஆகாது என்பது, ஈரெழுத்து ஒரு மொழியையும் தொடர்மொழியாகக் கொள்பவருக்கு அது இது முதலியனவும் தொடர் மொழிகள் ஆதலின் அவற்றின் ஈற்று உகரமும் குற்றிலுகரம் ஆகும் என்று கருத வாய்ப்பு ஏற்படும், நன்னூலார் ‘பிறமேல் தொடரவும் பெறுமே’ என்று எதிர்மறை உம்மை கொடுத்துச் சொல்லாது, ‘பிறமேல் தொடர்தல் வேண்டும்’ என்று கூறியிருப்பின் அது சிறக்கும்.

புணர்ச்சி வேற்றுமை - குற்றியலுகரம் மெய்ஈறு போல உயிர்ஏற இடம் கொடுக்கும் நிலை.

பொருள் வேற்றுமை - ஏவல் ஒருமை வினையில் குற்றியலுகர ஈறு வாராமையின் ‘இக்கட்டு நேற்று வந்தது’ என் புழிக்கட்டு என்ற பெயர் இறுதி உகரம் முற்றியலுகரமாயும், இவற்றைக்கட்டு என்ற ஏவல்வினை இறுதி உகரம் முற்றியலுகரமாயும் இருத்தலை உணர்க ஆசிரியர் தொல்காப்பியனாரும்.

‘ஒள என வரூஉம் உயிர்இறு சொல்லும்
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும்