147 ‘வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை இயற்கை நிலையலும உரித்தே’ தொல். 409 என்ற நூற்பாக்களை உட்கொண்டு, ‘கவ்விடைக் குற்றுகரம் காதல் இனம் என்று, கவ்வினைத் தான் சேர்ந்து கரைந்த’ செக்குக்கணை சுக்குக்கொடு என்ற சொற்களின் குகரம் (உகரம்) கால் மாத்திரையது ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்திகளை நச்சினார்க்கினியர் சொற்கொண்டே விளக்குகிறார். ‘வல்லொற்றுத் தொடர்மொழி’ என்ற நூற்பா வுரையில் நச்சினார்க்கினியர், ‘வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரம், வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாய் வரும் இடத்து ‘இடைப்படின் குறுகும்’ தொல்.37 என்பதனால் கூறிய அரைமாத்திரையினும் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து என்றவாறு. உம்மை எதிர்மறை. (எ-டு) கொக்குக்கடிது கொக்குக்கடுமை என அரை மாத்திரையில் குறைந்தவாறு, குரங்கு கடிது என்பது முதலியவற்றொடு படுத்துச் செவி கருவியாக உணர்க’ என்று குறிப்பிட்டுள்ளமை காண்க. குற்றுகரம் ஈற்று அயல் அசையைக்கொண்டு, நெடில் இறுதி, குறிலிணை இறுதி, குறில்நெடில் இறுதி, நெட்டொற்று இறுதி, குறில்இணைஒற்றுஇறுதி, குறில் நெடில் ஒற்றுஇறுதி. குற்றொற்று இறுதி என ஏழாயின் காடு, பகடு, வடாது, சால்பு, உவந்து, உராய்பு, வந்து என்பன எடுத்துக்காட்டுக்களாம். ஆய்தம் தொடர்வன இப்பகுப்புக்களுள் அடங்கா. அஃது என்பது போன்று ஆய்தம் தொடர்வனவற்றைக் குற்றொற்று இறுதியாக அடக்கல் வேண்டும். சுண்ணாம்பு போல்வன இப்பகுப்பில் அடங்கா. அவை குற்றொற்று நெட்டொற்று |