146 என்று எடுத்துக் காட்டுகள் அமைத்து நோக்குமிடத்து. யகரம் குதுபு என்பனவற்றோடும், ரகரம் குபு என்பனவற்றோடு, லகரம் குபு என்பன வற்றோடும், ழகரம் குதுபு என்பனவற்றோடும், ளகரம்குபு என்பனவற்றோடும் அன்றிப் பிறவற்றோடு தொடர்ந்து மொழி ஆகா எனவும், வகரம் குற்றியலுகர எழுத்து எதனொடும் தொடர்ந்து வாராது என்பதும் பெறப்படுதலின், இடை ஒற்று ஆறும் குசுடுதுபுறு என்ற ஆறனோடும் மயங்கா என்று குறிப்பிட்டார். தொல்காப்பியனாரை ஒட்டி, ‘யரழ என்னும் மூன்றும் ஒற்றக் கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்’ தொல். 48 எனவே, ‘ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகா’ 407 என்பதனைச் சுட்டி. ஈர்க்கு மொய்ம்பு என்பனவற்றின்கண் இடையெழுத்துக்கள் இருக்கின்றன எனினும் அவை ஈற்று அயல் எழுத்தாக நில்லாமையின, அவை பற்றி இச்சொற்களை இடைத்தொடர் என்னாது ஈற்று அயல் எழுத்தை உட்கொண்டு, வன்தொடர் மென்தொடர் என்றே குடுயிடுதல் வேண்டும் என்பதனைக் குறிப்பிடுகிறார். ‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரம்மிசை நகரமொடு முதலும்’ தொல். 67 ‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது அப்பெயர் மருங்கின் நிலைஇய லான’ தொல். 68 என்ற தொல்காப்பிய நூற்பாக்களை உட்கொண்டு, நுந்தைஎன்ற சொல்லின் முதலெழுத்துக் குற்றியலுகரம் என்றார். ‘இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே கடப்பாடு அறிந்த புணரியல் ஆன’ தொல். 37 |