பக்கம் எண் :

226

என்னும் குறியீடு கொண்டார் ஆயினும், முதல் இறுதிகளை ஒற்றுமை நயம் பற்றி உயிர்மெய்முதல், உயிர் மெய்ஈறு என ஓதாது. வேற்றுமை நயம் பற்றி வெய்ம் முதல் உயிர்ஈறு என ஓதியவாறே. ஈண்டும் கருவி துணங்கை என்பனவற்றை உயிர்மயக்கம் எனக்கோடல் வேண்டும்; அதனை, மறந்து உயிர்மெய் மயக்கம் எனல் பொருந்தாமை அறிக.

அமைதி

தொல்காப்பியனார் மெய்ம்மயக்கம் ஒன்றே கூறியதனைத் தன் கோட்கூறல் என்னும் உத்திக்கு இனம் என்றும், பிறன் உடன்பட்டது தான் உடன்படுதல் அன்று என்றும் முறையே வெளிப்படையானும் குறிப்பானும் பெறப்படவைத்த பேராசிரியர் போல்வார் தமிழில் மயக்கம் ஒன்பது என்று கொண்ட கொள்கையை நோக்க மெய்ம்மயக்கம் ஒன்றற்கே மயக்கம் என்று பெயரிடும் மரபு முன்னவர் கருத்தில் இல்லை என்பது தேற்றம். வடமொழியோடு தமிழை நன்கு ஒப்பிட்டு இலக்கணம் வரைந்த பிரயோக விவேக நூலாரும் சையோகம் மெய் ஒன்றற்கே உரியது என்று குறிப்பிட்டார் அல்லர். ‘உயிர்மெய் மயக்கு அளவு இன்றே’ நன். 110 என்ற நன்னூலாருக்கும் மெய்ம்மயக்கம் ஒன்றே மயக்கம் என்ற பெயர் பெறும் என்ற கருத்து இன்று என்பது வெளிப்படை.

‘ர ழ தனிக்குறில் அணையா’ நன். 119 என்பது உயிர்மெய்யோடு தனிமெய் மயங்குவனவற்றில் சிலவற்றிற்கு வரையறை கூறியதாகும். அணைதல் என்பது மயக்கம் என்ற பொருளில் வரும் பிறிதொரு சொல் என்பதும் வெளிப்படை. பரந்து பட்டுக்கிடக்கும் உயிர் மெய் மயக்கத்தில் சிலவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் தருவதும் உரை எழுதுவோர் கடைமைகளில் ஒன்றாம்.