227 உயிர்மெய் சிலஇடங்களில் ஓர் எழுத்தாகவும் சில இடங்களில் ஈரெழுத்தாகவும் கொள்ளப்படுதல் இலக்கண நூல்களுள் காணப்படும் செய்தியே. ‘ஆயிடை வருதல் இகார ரகாரம்’ தொல். 463 ‘வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய் ஏகலும் உரித்துஅஃது ஏகினும் இயல்பே.’ நன். 168 ‘சாவஎன் மொழிஈற்று உயிர்மெய் சாதலும் விதி.’ நன். 169 ‘தெங்குநீண்டு ஈற்றுயிர் மெய்கெடும் காய்வரின்.’ நன். 187 முதலிய விதிகளை நோக்குக. எனவே, ‘எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீ ரியல’ தொல். 103 எனக் கூறுதல் எளிமை கருதிக்கொண்டவரும் ஒரோவழி உயிர்மெய்யை ஒரே எழுத்தாகக்கொண்டு புணர்த்ததும் காண்க. ஒத்த நூற்பாக்கள்: ‘அம்மூ வாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயங்கு உடனிலை தெரியுங் காலை.’ தொல்.22 ‘மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும் தம்முன் தாம்வரும் ரழஅலங் கடையே.’ 30 ‘சாயா மயக்கம்தம் முன்னர்ப் பிறவொடு தாமும் வந்து வீயாத ஈரொற்றும்மூ வொற்றும் உடனிலை வேண்டுவரே.’ வீ.4 ‘கசதப ஒழித்த ஈரேழன் கூட்டம் மெய்ம்மயக்கு உடனிலை ரழஒழித்த ஈரெட்டு |