228 ஆகும்இவ் விருபால் மயக்கும் மொழியிடை மேவும் உயிர்மெய்ம் மயக்குஅளவு இன்றே.’ நன். 110 ‘ரழஅல்லன தம்முன் தாம்உடன் நிலையும்.’ 118 ‘வேற்றுநிலை கசதப மெய்பதி னான்கும் என்மனார் நற்றமிழ் வல்லோர்.’ மு. வீ. எ. 65 ‘ரழ அல்லனஉட னிலைஎன மொழிப.’ 87 ‘உயிர்மெய்ம் மயக்கிற்கு ஓர் அளவு இன்றே’ 79 ‘சங்கம் புணர்ச்சி சையோகம் மயக்கம் புல்லல் கலத்தலும் பொருள்ஒன் றேயாம்.’ 66 சிறப்பு விதி 32. ஙம்முன் கவ்வும் வம்முன் யவ்வும் ஞநமுன் இனமும் யகரமும் டறமுன் கசபவும் ணனமுன் இனமும் கசஞப மயவவும் மம்முன் பயவவும் யரழமுன் மொழிமுதல் மெய்யும் லளமுன் கசப வயவும் நின்று மயங்கும் என்ப. இது மேல் பொதுவகையான் கூறிய மெய்ம்மயக்கத்தினைச் சிறப்பு வகையான் வரைந்து கூறுகின்றது. இ-ள்: கங்குல் என ஙகரம் முன்னர்க் ககரமும், தெவ்யாது என வகரம் முன்னர் யகரமும், மஞ்சு உரிஞ்யாது எனவும், பந்து வெரிந்யாது எனவும், ஞகரந கரங்களின் முன்னர் முறையே சகர தகரங்களும் யகரமும். கட்க கட்சி கட்ப எனவும், கற்க முயற்சி கற்க எனவும் டகர றகரங்களின் முன்னர்க் ககர சகர பகரங்களும், |