229 வண்டு எண்கு வெண்சாந்து வெண்ஞான் பண்பு வண்மை மண்யாது எண்வட்டு எனவும், கன்று புன்கு புன்செய் மென்ஞாண் அன்பு வன்மை பொன்யாது பொன்வலிது எனவும், ணகர னகரங்களின் முன்னர் முறையே டகர றகரங்களும், ககர சகர ஞகர பகர மகர யகர வகரங்களும், கம்பு திரும்யாது நிலம்வலிது என மகரம் முன்னர்ப் பகர யகர வகரங்களும். ஆய்க ஆய்தல் ஆய்நர் ஆய்பவை வாய்மை எய்சிலை தெய்வம் பாய்ஞெகிழி எனவும், ஆர்க ஆர்தல் ஆர்நர் ஆர்பவை நேர்மை வார்சிலை சேர்வது நேர்ஞெகிழி பேர்யாளை எனவும், ஆழ்க ஆழ்தல் ஆழ்நர் ஆழ்பவை கீழ்மை வாழ்சேரி வாழ்வது வாழ்ஞெண்டு வீழ்யானை எனவும், யகர ரகர ழகரங்களின் முன்னர்க் ககர தகர நகர பகர மகர வகர ஞகர யகரங்களும், செல்க வல்சி செல்வம் கொல்யானை எனவும், கொள்க நீள்சினை கொள்ப கள்வன் வெள்யாறு எனவும் லகர னகரங்களின் முன்னர்க் ககர சகர பகர யகர வகரங்களும், நின்று மயங்கும் என்று கூறுவர் ஆசிரியர். யரழ முன்னர் மொழிமுதல் மெய்யும் என்றாரேனும். செய்யாறு என யகரம் முன்னர் யகரம் மயங்குதல் உடனிலை மயக்கம் ஆதலின், அஃது ஒழித்து ஏற்புழிக் கோடலான் ஏனைய கோடும். 32 விளக்கம்: இவ்வாசிரியர் மயக்கத்தை ஒருமொழி இருமொழி இரண்டன்கண்ணும் கொண்டாரேனும் எடுத்துக்காட்டுக்களைத் தனிமொழிகள் வாயிலாகவே நச்சினார்க்கினியரை ஒட்டித் தந்துள்ளார். வினைத் தொகையும் பண்புத்தொகையும் நிலைமொழி வருமொழி |