230 களாகப் பிரித்துக் கருவி செய்யப்பட்டா ஆதலின், அவையும் ஒருமொழி என்பதே இவ்வாசிரியருக்கும் கருத்து. அதனை வேற்றுமை அல்வழிப் புணர்ச்சிகளை விளக்கும் ‘ஐம்முதல் ஆறு தழுவுதொடர்’ இ.வி. 54 என்ற நூற்பா உரையில் காண்க. நச்சினார்க்கினியர் இம்மயக்கத்தை ஒருமொழிக் கண்ணேயேகொண்டு, புணர்மொழிபற்றியவற்றைப் புணரியல்களில் காண்க’ என்றார். மெய்ம்மயக்கம் ஆகிய இடைநிலை நூன்மரபினுள்ளும் ஏனைய முதல்நிலை இறுதிநிலை என்பன மொழிமரபுள்ளும் தொல்காப்பியனாரால் குறிப்பிடப்பட்ட திறன் ஆராயத்தக்கது. இவ்வாசிரியர் இம்மயக்கத்தை நுனித்து உணரவல்ல நுண்ணறிவினோர் புணர்ச்சி வேறுபாடுகளை இதனைக் கொண்டே அறிதல் கூடும் என்ற கருத்தினர். ஒத்த நூற்பாக்கள்: ‘டறலள என்னும் புள்ளி முன்னர்க் கசப என்னும் மூ எழுத்து உரிய.’ தொல். 23 ‘இவற்றுள் லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்.’ 24 ‘ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்த் தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே.’ 25 ‘அவற்றுள் ணனஃகான் முன்னர்க் கசஞப மயவ ஏழும் உரிய.’ 26 ‘ஞநமவ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே.’ 27 ‘அவற்றுள் மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்,’ 28 |