231 ‘யரழ என்னும் புள்ளி முன்னர் முதலாகு எழுத்தும் ஙகரமொடு தோன்றும்,’ 29 ‘ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.’ நன் 110 ‘ஞநமுன் தம்மினம் யகரமொடு ஆகும். 111 ‘டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்.’ 112 ‘ணனமுன் இனம்கச ஞபமய வவ்வரும்.’ நன். 113 மு. வீ, எ. 70 ‘மம்முன் பயவ மயங்கும் என்ப.’ நன். 114 மு. வீ. எ. 72 ‘யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும்.’ நன். 115 மு. வீ. எ. 73 லளமுன் கசப வயஒன் றும்மே.’ நன். 112 ‘ஙகாரை முன்னர்க் ககாரம் மயங்கும்.’ மு. வீ. எ.67 ‘வரும்சய ஞகாரமுன் மருவி என்ப.’ 68 ‘கசப டகரமுன் கலந்து மயங்கும்.’ 69 ‘யகரமும் தகரமும் நகரமுன் ஆகும்.’ 71 ‘லள முனர்க் கசப வயவரும் என்ப.’ 74 ஈரொற்று உடனிலை 23, யரழஒற் றின்முன் கசதப ஙஞநம ஈரொற் றாம்ரழத் தனிக்குறில் அணையா. இஃது ஈரொற்று உடனிலை ஆமாறும். வரையறை இன்றி மயங்குவனவற்றுள் சிலவற்றிற்கு வரையறையும் கூறுகின்றது. இ-ள்: யரழ என்னும் மூன்ற மெய்முன்னரும் கசதப ஙஞநம என்னும் எட்டு ஒற்றும் வந்து ஈரொற்று உடன் நிற்கும். ரகர ழகரம் என்னும் இரண்டு |