232 ஒற்றொடும் பிறிது ஓர் எழுத்தையும் சாராது தனியே நின்ற குற்றெழுத்துக்கள் மயங்கா என்றவாறு. ஒற்றொடு மயங்காது எனவே, உயிர்மெய்யோடு கரு மழு எனவும், தனிக்குறில் எனவே குறில்இணை புகர் புகழ் எனவும், நெடில் கார் காழ் எனவும் மேலைப் பொதுவிதியான் மயங்கும் எனக் கொள்க. வரலாறு: வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு காய்ங்கனி வேய்ஞ்சினை காய்ந்தனம் காய்ம்புறம் எனவும், பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு நேர்ங்கல் நேர்ஞ்சினை நேர்ந்தலை நேர்ம்புறம் எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு தாழ்ங்குலை தாழ்ஞ்சினை வாழ்ந்தனம் வீழ்ம்படை எனவும் வரும். பிறவும் அன்ன, ஆகாதனவற்றிற்கு உதாரணம் இன்று. 33 விளக்கம்: எடுத்துக்காட்டுக்களில் பல நச்சினார்க்கினியரை ஒட்டியே எழுதப்பட்டுள்ளன. நன்னூல் உரைகாரர் முதலியோர் புணர்மொழிக்கண்ணேயே எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளனர். ‘ரழ தனிக்குறில் அணையா’ நன்.119 என்பது வரையறை இன்றி உயிர்மெய்யோடு தனிமெய் மயங்குவனவற்றில் சில ஒற்றிற்கு வரையறை கண்டு கூறியது என்றார் நச்சினார்க்கினியர். ‘ரழ தனிக்குறில் அணையா’ எனவே, யகரம் தனிக்குறில் அணைந்து பொய் மெய் என்று அமையுமாறு காண்க. ஒத்த நூற்பாக்கள்: ‘யரழ என்னும் மூன்றும் ஒற்றக் கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்.’ தொல். 48 ‘அவற்றுள் ரகார ழகாரம் குற்றொற்று ஆகா.’ 49 |