பக்கம் எண் :

233

முழுதும்           நன். 119

‘ரழத்
தனிக்குறில் சாரா தாமும்மிகா என்ப.’           தொ.வி. 36

‘ரகார ழகாரம் குற்றொற்று ஒற்றா.’           மு.வீ.எ. 77

செய்யுட்கண் ஈரொற்று உடனிலை

33. லளமெய் திரிந்த னணவொடு மகாரம்
ஈரொற்று ஆகும் செய்யுள உள்ளே.

இது செய்யுட்கண் ஈரொற்று உடனிலை மயக்கம் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: லகார ளகார ஒற்றுக்கள் திரிந்த னகார ணகார ஒற்றுக்களோடு கூட மகர ஒற்று ஈரொற்று உடனிலையாம் செய்யுளகத்து என்றவாறு.

வரலாறு:

‘எம்மொடு தம்மைப் பொருஉங்கால் பொன்னொடு
கூவிளம் பூத்தது போன்ம்’ எனவும்,

‘வெயிலியல் வெஞ்சுரம் ஐயநீ ஏகின்
மயிலியல் மாதர் மருண்ம்’

எனவும் வரும். 34

விளக்கம்: மகரம் குறுகுதலை மகரக் குறுக்கத்தில் சுட்டியுள்ளார் ஆதலின், அதனை இவ்வாசிரியர் ஈண்டுக் கூறவில்லை. மகரக் குறுக்கத்தின் முன்நின்ற னகர ணகரங்கள் லகர ளகரங்களின் திரிபே என்பதை ஆண்டே நூற்பா 22இல் விளக்கியமை காண்க.

‘நன்போது அவிழ்குழல்கார் நண்பனே செம்மேனி
பொன்போன்ம்பல் வெண்முத்தம் போன்ம்’