234 என்ற மாறன் அலங்காரத்து 98-ஆம் நூற்பா உரைப்பாடலில், போன்ம் என்பதற்கு அந்நூல் உரைவரைந்த காரிரத்ந கவிராயர், “போலும் என்னும் உவம உருபு ‘செய்யும்என்னும் எச்சஈற்று உயிர்மெய் சேறலும் செய்யுளுள் உம்உந்து ஆகலும் முற்றேல் உயிரும் உயிர்மெய்யும் ஏகலும் உளவே’ நன். 311 என்பதனான், முற்று ஆதலின் உயிர்கெட்டது. ‘மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும்’ தொல். 367 என்பதனால் லகரம் னகரமாய்த் திரிந்தும், ‘னகாரம் முன்னர் மகாரம் குறுகும்’ தொல் 55 என்பதனால் ஈற்று மகரம் குறுகியும், ‘செய்யுள் இறுதிப் போலி மொழிவரின் னகார மகாரம் ஈரொற்று ஆகும்’ தொல். 51 என்பதனால் ஈரொற்று உடனிலையாயும், மேலே பகர ஒற்று வருதலின் செய்யுளிடைப்பட்டும் வந்த முற்றுப் போன்ம என்பதாயிற்று” என்று சொல் அமைப்புப் பற்றி விளக்கிக் கூறியது காண்க. ஒத்த நூற்பாக்கள்: ‘செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகாரம் மகாரம் ஈரொற்று ஆகும்.’ தொல். 51 ‘லளமெய் திரிந்த னணமுன் மகாரம் நைந்துஈ ரொற்றாம் செய்யுள் உள்ளே’ நன். 120 மு. வீ.எ.80 முதல்ஈறு இடைநிலைகளுக்குப் புறனடை 35 தம்மரபு இசைப்பின் முதல் ஈறு இடைநிலை அம்மரபு இல்லவும் ஆம்என மொழிப. இது முதல்ஈறு இடைநிலை ஆகாதனவும் ஒரோவழி ஆம் என்கிறது. |