பக்கம் எண் :

235

இ-ள்: தம் இயல்பைச் சொல்லும் இடத்து மொழிக்கு முதல் ஆகாதனவும் ஈறு ஆகாதனவும் இடை ஆகாதனவும் முதல் ஈறு இடைகளில் நிற்றற்கு உரிய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

வரலாறு: ஙக்களைந்தார் டப்பெரிது எனவும், கெக்களைந்தார் கொப்பெரிது எனவும்,

‘வல்லெழுத்து இயையின் டகாரம் ஆகும்’ தொல். 302 எனவும். முறையே முதலும் ஈறும் இடைநிலையும் ஆயினவாறு காண்க. பிறவும் அன்ன.

‘தம்மரபு இசைப்பின் அம்மரபு இல்லவும் ஆம்’ எனவே, அக்குறிது கக்களைந்தார் எனவும், ஆ நெடிது கா நன்று எனவும்,

‘டறலள என்னும் புள்ளி முன்னர்க்
கசப என்னும் மூவெழுத்து உரிய’           தொல். 23

‘அவற்றுள்
மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்’      28

எனவும் அம்மரபு உள்ளன முதலும் ஈறும் இடையும் ஆதல் கூறவேண்டா’ ஆயிற்று. 35

விளக்கம்: ஙக்களைந்தார் டப்பெரிது-மொழி முதலில் வாராதன தம்பெயர் மொழிதற்கண் வந்தமைக்கு எடுத்துக்காட்டு. கெக்களைந்தார் கொப்பெரிது-மொழிக்கு ஈறு ஆகாதன தம்பெயர் கூறுதற்கண் ஈறு ஆயமைக்கு எடுத்துக்காட்டு கெ, கொ என்பன ஓரெழுத்து ஒருமொழிபோல்வன ஆதலின், தமக்குத் தாமே முதலும் ஈறும் ஆதல் அறிக.

‘இயையின் டகாரம்’ தொல். 302 இடையே னகர ஒற்று டகரத்தொடு மயங்கியது.