பக்கம் எண் :

236

இலக்கண விளக்கச் சூறாவளி

முதலாம் எனவே, ஈறாதலும் தானே பெறப்படுதலின், முதல் ஈறு இடைநிலை என வேண்டா கூறினார். இவ்விதிக்கும் பயன் கூறாதார்க்கு இச்சூத்திரம் பயனில் கூற்றாய் முடியும் என்க.

அமைதி

தானே புலனாதல் என்பது நுண்ணுணர்வு உடையார்க்கு அன்றே? ஏனையர்க்கும் புலனாதற்காக எழுத்துக்கள்யாவும் தம்பெயர் கூறுதற்கண் முதல் ஈறு இடைகளில் வரும் எனல் வேண்டும் என்பது. இது நச்சினார்க்கினியர் கருத்தும் ஆகும். (தொல் 77 உரை) இவற்றிற்கு முற்கூறப்பட்ட முதல் ஈறு இடைநிலை பற்றிய விதிகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டா என்பது இந்நூற்பாவின் பயன் ஆதல் இந்நூற்பாப் பாயிர உரையால் போதருவது காண்க.

ஒத்த நூற்பாக்கள் :

‘தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை.’          தொல்.47

‘முதலா ஏன தம்பெயர் முதலும்.’      66

‘எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே.’      77

‘தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்
இம்முறை மாறியும் இயலும் என்ப.’           நன். 121           மு.வீ.எ. 81

எழுத்துப் போலி

36, அம்முன் இகரம் யகரம் என்றிவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வோடு
உவ்வும் வவ்வும் ஒளஓ ரன்ன
இகர யகரம் இறுதி விரவும்
புகரின்று உணர்ந்தோர் வரைந்தனர் போற்றல்.