238 எ-டுஐவனம்-அஇவனம். ‘ஆகும்’ என்றதனால், இஃது இலக்கணம் அன்று ஆயிற்று. அகரமும் உகரமும் கூட்டிச்சொல்ல, ஒளகாரம்போல இசைக்கும்; அது கொள்ளற்க என்றவாறு. எ-டு: ஒளவை அஉவை என வரும். அகரத்தின்பின் இகரமேயன்றி யகரமாகிய புள்ளி வந்தாலும் ஐ எனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவுபெறத் தோன்றும் என்றவாறு. எ-டு: ஐவனம் அய்வனம் எனவரும். ‘மெய்பெற’ என்றதனால், அகரத்தின் பின்னர் உகரமே அன்றி வகரப் புள்ளியும் ஒளகாரம்போல வரும் என்று கொள்க. ஒளவை அவ்வை என வரும். இகரமும் யகரமும் ஒருமொழியின் இறுதிக்கண் ஓசை விரவிவரும், அவ்விகாரம் கொள்ளற்க என்றவாறு. எ-டு: ‘நாய் நாஇ எனவரும். ‘என்பது நச்சினார்க்கினியர் உரை. உரையாசிரியரும் இங்ஙனமே கொள்வர். இனிச் சிவஞானமுனிவர் இந்நூற்பாக்கள் ஐஒள என்ற எழுத்துக்களின் அமைப்பினைக் கூறுகின்றன என்று பொருள்கொள்ளுவது மொழிமரபாகிய இவ்வியல் அமைப்பிற்கும், நூற்பாக்கள் அமைப்பிற்கும், ‘ஐ என் நெடுஞ்சினை’ என்ற தொடர் அமைப்பிற்கும் பொருந்தாது. மொழிமரபு மொழியிடைப்பட்ட எழுத்துக்களையே உணர்த்துவதாம். சினை என்பது ஒரு சொல்லின் கூறாகிய எழுத்தேயாம். இடையே உள்ள ‘ஓரளபு ஆகும் இடனுமார் உண்டே’ தொல்.56 என்ற நூற்பாவை விடுத்து ஏனையவற்றை இணைத்து உரைத்தலும் பொருந்தாது. முனிவருக்கு வழிகாட்டியவர் பிரயோக விவேகநூலார் |