பக்கம் எண் :

251

சிலபல என்னும் தமிழ்வழக்கு,

‘சிலசொல்லின் பல்கூந்தல்’           புறம். 166-16

‘சிற்சில வித்திப் பற்பல விளைத்து’           நற். 328-2

முதலியவற்றால் அறியப்படும். சிலபல என்னும் தமிழ் வழக்கினை நச்சினார்க்கினியரும் தொல்காப்பியம் 45 ஆம் நூற்பா உரையில் குறிப்பிட்டுள்ளார், ‘இருபெயர் பலபெயர்’ என்ற சொற்படல எச்சஇயல் நூற்பாவில் (21) ‘இரண்டனையும் பன்மை என்று வேண்டான் இவ்வாசிரியன்’ என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று இரண்டு பல என்பதும் தமிழ் வழக்கு ஆதல்

‘ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு சொல்லினும்’           புறம். 101-1,2

‘மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றுஇரண் பலபல கடந்து’           பதிற். 41-14, 15

முதலியவற்றான் உணரப்படும்.

எழுத்தோ எழுத்தின் கூட்டமோ அமைவது மட்டும் போதாது; அதற்குப் பொருள் இருந்தால்தான் சொல் எனப்படும் ஆதலின், பொருளற்ற இறிஞி மிறிஞி என்பன சொல்லாகா என்பது.

தொடர்தல்-மூன்று முதலிய எழுத்துக்களாகத் தொடர்தல். அங்ஙனம் தொடருங்கால், பகாப்பதம் மூன்று எழுத்து முதல் ஏழு எழுத்து எல்லைகாறும் தொடர்வதற்கு அறம் முதலியனவும், பகுபதம் அவ்வாறு ஒன்பது எழுத்து எல்லைகானும் தொடர்வதற்குக் கூனன் முதலியனவும் எடுத்துக் காட்டுக்களாம். எழுந்திருந்தான் என்பதில் இரு என்ற இடைநிலை அசையாகத் தொடர்ந்தது; பொருத்துவிக்கின்றனன் என்பதில் வி என்ற பிறவினைவிகுதியும் பகுதியொடு சேர்ந்திருத்த