பக்கம் எண் :

250

விளக்கம்: ‘பதமாவது எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள்தன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவி ஆகிய பெயர் வினை இடைஉரி என்ற நான்கனையும்’ என்று நச்சினார்க்கினியர் எழுத்துப்படலம் சொற்படலம் என்ற இரண்டன் தொடக்கத்தும் கூறியுள்ளார்.

மொழி ஆக்கம்-எழுத்தினான் மொழி உண்டாதல்.

அதன்பகுதி-மொழியின் வகை
ஈரெழுத்தை இவ்வாசிரியர் ‘இணை எழுத்து’ என்றார்,

மேற்கூறிய இலக்கணம் ‘எண் பெயர்’ இ. வி. 2 என்ற நூற்பாவில் குறிக்கப்பட்ட முதல் பத்துச் செய்திகளின் விரி.

‘மொழிப்படுத்து...............புலவர்’           தொல். 53

“இஃது, எழுத்துக்களுக்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயம் தீர்த்தல் நுதலிற்று.

மொழிக்கண்படுத்துச் சொல்லினும். தெரிந்து கொண்டு வேறே சொல்லினும், உயிரும் மெய்யும் ஆகிய எழுத்துக்கள் பெருக்கம் சுருக்கம் உடையன போன்று இசைப்பினும் தம்மாத்திரை இயல்பில் திரியா என்று சொல்லுவர் புலவர்.

எ-டு : அஃகல்-அ எனவும், ஆல்-அ எனவும், கடல்-க எனவும், கால்-கா எனவும் கண்டுகொள்க.

‘வேறு’ என்றதனான், எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்கண்ணும் எழுத்து இயல்திரியா என்பது கொள்க” என்ற உரையாசிரியர் உரையை ஈண்டுக் குறித்துள்ளார். சொல்லில் பொருள் சிறக்கும் இடத்தை எடுத்தும், ஏனையவற்றைப்படுத்தும் ஒலிக்கும் முறை வழக்கு நோக்கி அறிக.