பக்கம் எண் :

291

பண்புப்பெயர் விகுதிகள்

மை...நன்மைகு...நன்கு
...தொல்லைறி...நன்றி
சி...மாட்சிறு...நன்று
பு...மாண்புஅம்...நலம்
...மரபுநர்...நன்னர்

பிறவினைப் பகுதிகள்

வி...செய்விடு...ஊட்டு
பி...நடப்பிது...நடத்து
கு...போக்குபு...எழுப்பு
சு...பாய்ச்சுறு...தீற்று

தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாகிய தேய் முதலிய பகுதிகள் தன்வினையில் தேய்ந்தான் என மெல்லொற்று அடுத்தும், பிறவினைக்கண் தேய்த்தான் என வல்லொற்று அடுத்தும் வருமாறு காண்க.

விடு, ஒழி என்பன துணிவுப் பொருள்தரும்; செய்து விட்டான், செய்தொழிந்தான் எனவரும்.

கொள்விகுதி தற்பொருட்டுப் பொருள் தரும்; அடித்துக் கொண்டான் எனவரும்.

படு, உண் என்பன செயப்பாட்டுவினைப் பொருள் தரும் கட்டப்பட்டான், கட்டுண்டான் எனவரும்.

மைவிகுதி தன்மைப்பொருள் தரும்: ஆண்மை பெண்மை எனவரும்.

இரு, இடு என்பன பகுதிப்பொருள் விகுதிகளாம்; எழுந்திருந்தான், உரைத்திடுகின்றான் எனவரும்.