292 பெயர் விகுதிகள் வினை முதற்பொருளிலும் செயப்படு பொருளிலும்; கருவிப் பொருளிலும் இ ஐ அம் என்ற மூன்று விகுதிகளும் வரும். அலரி ஊருணி மண்வெட்டி எனவும், பறவை தொடை பார்வை எனவும், எச்சம் தொல்காப்பியம் நோக்கம் எனவும் முறையே காண்க. வில்லன் வில்லான் வளையள் வளையாள் ஊரர் ஊரார் என முறையே அன் ஆன் அள் ஆள் அர் ஆர் என்ற விகுதிகளும், வில்லி வாளி உருவிலி திருவிலி செவியிலி அரசி பார்ப்பனி செட்டிச்சி உழத்தி கிழத்தி கணவாட்டி வண்ணாத்தி என்ற இகரவிகுதியும், காதறை செவியறைஎன்ற ஐகாரவிகுதியும் பெயர்க்கண் வந்தமை காண்க. இனி, வீரசோழியம் பெயர் விகுதிகள் பற்றிக் கூறுவன பின்வருமாறு: மை | ...வலிமை நெடுமை, குறுமை | வு | ...வலிவு மெலிவு | அம் | ...நீளம் | கம் | ....குறுக்கம் | பு | ...ஆலிப்பு, மெலிப்பு | வல் | ...இளவல் | து | ...வலிது, மெலிது | அளவு | ...தண்ணளவு |
பொருட்பெயர் விகுதிகள் மன் | ...குறுமன், கருமன் | ஐ | ...வெள்ளை, பச்சை | கன் | ...சிறுக்கன் | அம் | ...புறம், அகம் | ஆன் | ...அரியான், எளியான் | அவன்: | ...கரியவன், குறியவன் | அன் | -கரியன், குறியன் | | | வன் | ...புலவன், சிறுவன் | அவள்: | கரியவள், குறியவள் | ஆள் | ...செய்யாள், கரியாள் | மி | ... கருமி, குறுமி |
|